என் மலர்
சினிமா செய்திகள்
விஜய்சேதுபதி வசனத்தில் 'குலசாமி'.. வெளியான போஸ்டர்
- குட்டிப்புலி சரவண சக்தி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ’குலசாமி’.
- இந்த படத்திற்கு பின்னணி பாடகர் மஹாலிங்கம் இசையமைக்கிறார்.
நாயகன், பில்லா பாண்டி, போன்ற படங்களை இயக்கிய குட்டிப்புலி சரவண சக்தி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'குலசாமி'. இந்த படத்தில் விமல் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக தன்யா ஹோப் நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் போஸ் வெங்கட், குட்டிப்புலி சரவண சக்தி, முன்னாள் போலீஸ் அதிகாரி ஜாங்கிட் , வினோதினி, மகாநதி சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
குலசாமி
நடிகர் விஜய்சேதுபதி வசனம் எழுதியுள்ள இந்த படத்தை எம்.ஐ.கே. புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடேட் தயாரித்துள்ளனர். இந்த படத்தின் மூலம் பின்னணி பாடகர் மஹாலிங்கம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இந்நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'குலசாமி' படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதனை நடிகர் விஜய்சேதுபதி தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.
'குலசாமி' திரைப்படம் வருகிற ஏப்ரல் 21-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.