என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
சினிமா செய்திகள்
![காக்காமுட்டை விக்னேஷ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு காக்காமுட்டை விக்னேஷ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு](https://media.maalaimalar.com/h-upload/2022/09/16/1762680-1.jpg)
விக்னேஷ்
'காக்காமுட்டை' விக்னேஷ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- காக்காமுட்டை படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகர் விக்னேஷ்.
- இவர் தற்போது ‘குழலி’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
காக்காமுட்டை, அறம், அப்பா போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் விக்னேஷ். இவர் தற்போது இயக்குனர் செரா. கலையரசன் இயக்கத்தில் கதாநாயகனாக நடித்துள்ள படம் 'குழலி'. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ஆரா நடித்திருக்கிறார்.
விக்னேஷ்
இப்படத்திற்கு டி.எம். உதயகுமார் இசையமைக்க, கார்த்திக் நேத்தா, தனிக்கொடி, ராஜாகுருசாமி மற்றும் ஆக்னஸ் தமிழ் செல்வன் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர். கே.பி. வேலு, எஸ். ஜெயராமன் மற்றும் எம்.எஸ். ராமசந்திரன் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஷமீர் இன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
முற்றிலும் கிராமத்து எதார்த்த முகங்களோடு உருவாகி உள்ள 'குழலி' திரைப்படம் உலக சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு சிறந்த திரைப்படத்திற்கான விருது, பின்னணி இசைக்கான விருது, சிறந்த நடிகைக்கான விருது என 16 விருதுகளை பெற்றுள்ளது.
குழலி போஸ்டர்
இந்நிலையில், இப்படம் வரும் செப்டம்பர் 23-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இத்திரைப்படத்தினை மொழி திரைக்களம் வெளியிடவுள்ளது குறிப்பிடத்தக்கது.