search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    மீண்டும் வேட்டை மன்னன் படத்தை கையில் எடுக்கும் நெல்சன்
    X

    மீண்டும் வேட்டை மன்னன் படத்தை கையில் எடுக்கும் நெல்சன்

    • நெல்சன் இயக்கத்தில் தற்போது உருவாகியிருக்கும் படம் ஜெயிலர்.
    • இப்படத்தின் வெளியீட்டிற்கு பிறகு சிம்புவின் வேட்டை மன்னன் படத்தை மீண்டும் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

    2018-ஆம் ஆண்டு நயன்தாரா நடிப்பில் வெளியான படம் 'கோலமாவு கோகிலா'. இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் நெல்சன் திலிப்குமார். இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதன்பின் சிவகார்த்திகேயனை வைத்து 'டாக்டர்' படத்தை இயக்கினார். இதன்மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து, விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கினார். தற்போது ரஜினியின் ஜெயிலர் படத்தை நெல்சன் இயக்கியுள்ளார். இப்படத்தின் ஷோகேஸ் வீடியோ நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.



    நெல்சன் திலிப்குமார் முதன் முதலில் சிம்புவை வைத்து வேட்டை மன்னன் என்ற படத்தை இயக்கினார். சில மாதங்கள் படப்பிடிப்பு நடைப்பெற்ற நிலையில் தவிர்க்க முடியாத காரணங்களால் தடைப்பட்டு வெளியாகாமல் போனது. அன்றைய பொழுது அப்படத்தில் இடம்பெற்ற சிம்புவின் போஸ்டர்கள் வெளியாகி அனைவரையும் கவர்ந்தது. இன்றளவும் சிம்பு ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கும் படங்களில் வேட்டை மன்னனும் ஒன்று.



    இந்நிலையில் வேட்டை மன்னன் படத்தை மீண்டும் கையில் எடுக்க நெல்சன் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஜெயிலர் படத்தின் வெளியீட்டிற்கு பிறகு வேட்டை மன்னன் படத்தின் பணிகளில் நெல்சன் இறங்கவுள்ளதாகவும் இது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

    Next Story
    ×