search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    ரஜினிகாந்த் பிறந்தநாள்: ஸ்டார் படத்தின் முதல் பாடலை வெளியிட்ட லோகேஷ் கனகராஜ்
    X

    ரஜினிகாந்த் பிறந்தநாள்: ஸ்டார் படத்தின் முதல் பாடலை வெளியிட்ட லோகேஷ் கனகராஜ்

    • ஸ்டார் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
    • ஸ்டார் படத்தில் கவின் நாயகனாக நடித்துள்ளார்.


    டாடா பட வெற்றியை தொடர்ந்து நடிகர் கவின் நடித்துள்ள திரைப்படம் "ஸ்டார்" என்ற தலைப்பில் உருவாகி இருக்கிறது. பியார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இளன் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

    கவினுடன் லால், அதிதி போஹங்கர், பிரீத்தி முகுந்தன், கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை எழில் அரசு மேற்கொண்டுள்ளார். படத்தொகுப்பு பிரதீப் இ செய்துள்ளார். அடுத்த ஆண்டு பிப்ரவரி 9-ம் தேதி வெளியாக இருக்கும் ஸ்டார் படத்தின் முதல் பாடல் வெளியாகி உள்ளது.


    நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு ஸ்டார் படத்தின் "காலேஜ் சூப்பர் ஸ்டார்ஸ்" என்ற பாடலை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார். யுவன் இசையில் உருவாகி இருக்கும் இந்த பாடல் வேகமாக வைரல் ஆகி வருகிறது.

    Next Story
    ×