என் மலர்
சினிமா செய்திகள்
தமிழ் நடிகர் துன்புறுத்தினாரா..? கொதித்தெழுந்த நித்யா மேனன்
- நடிகை நித்யா மேனன் தமிழில் பல படங்களில் நடித்துள்ளார்.
- இவர் தனுஷுடன் இணைந்து நடித்து வெளியான 'திருச்சிற்றம்பலம்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
நானி நடித்த 'வெப்பம்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நித்யா மேனன். அதன்பின்னர் 'ஓகே கண்மணி', 'காஞ்சனா 2', '24', 'மெர்சல்' போன்ற படங்களில் நடித்து அனைவரையும் கவர்ந்தார். கடந்த ஆண்டு இவர் தனுஷுடன் இணைந்து நடித்து வெளியான 'திருச்சிற்றம்பலம்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வரும் நித்யா மேனன் தமிழ் நடிகர் ஒருவர் படப்பிடிப்பில் தன்னை துன்புறுத்தியதாக நேர்காணல் ஒன்றில் தெரிவித்ததாக தகவல் வெளியானது. இதைத்தொடர்ந்து ரசிகர்கள் பலர் அவருடன் நடித்த தமிழ் பட நடிகர்களை பட்டியலிட தொடங்கினர்.
நித்யா மேனன் பதிவு
இந்நிலையில், இந்த செய்தியை நித்யா மேனன் மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், " இது முற்றிலும் தவறான வதந்தி. இது மாதிரியான ஒரு நேர்காணலை நான் கொடுக்கவில்லை" என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.