என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா செய்திகள்
ஒருவரை கிண்டல், நக்கல் செய்வதில் எனக்கு உடன்பாடில்லை - மனம் திறந்த 'வாரிசு' பட தயாரிப்பாளர்
- வாரிசு, துணிவு திரைப்படம் வருகிற பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
- வாரிசு திரைப்படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது.
விஜய் நடித்துள்ள வாரிசு, அஜித்குமார் நடித்துள்ள துணிவு ஆகிய 2 படங்களும் பொங்கல் பண்டிகையில் வெளியாகும் என்று அறிவித்து உள்ளனர். தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளை இந்த 2 படங்களும் சரிபாதியாக பிரித்துக்கொள்ள உள்ளன. இரண்டும் முன்னணி கதாநாயகர்கள் என்பதால் ரசிகர்கள் மத்தியில் போட்டிகள் நிலவி வருகிறது.
துணிவு - வாரிசு
இதைத்தொடர்ந்து 'வாரிசு' படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு, "விஜய் தமிழ்நாட்டின் நம்பர் ஒன் ஸ்டாராக இருக்கிறார். அவருக்கு அடுத்த இடத்தில் தான் அஜித் இருக்கிறார். இரண்டு படங்களுக்கும் சமமாக திரையரங்குகள் ஒதுக்குவது சரியாக இருக்காது. துணிவு திரைப்படத்தை ரிலீஸ் செய்யும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வாரிசு படத்திற்கு அதிக திரையரங்குகள் வேண்டுமென பேசப்போகிறேன்" என்று கூறினார்.
துணிவு - வாரிசு
இந்த கருத்து மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், சமீபத்தில் தில் ராஜு அளித்துள்ள பேட்டியில், "மீடியா முன்னாடி பேச வேண்டும் என்றாலே பதட்டமாகுது. நான் என்ன பேசினாலும் சர்ச்சை ஏற்படுத்திவிடுகிறார்கள். சமீபத்தில் நான் ஒரு சேனலுக்கு 45 நிமிடம் பேட்டி கொடுத்திருந்தேன். ஆனால் அதிலிருந்து ஒரு 20 செகன்டை மட்டும் எடுத்து போடுகிறார்கள். அதற்கு முன்னாடி பின்னாடி என்ன பேசியிருந்தேன் என்று முழுவதும் தெரியாமல் சமூக வலைதளத்தில் வைரல் செய்து விட்டார்கள்.
தில் ராஜு
அந்த பேட்டியை முழுவதும் பார்த்திருந்தால் நான் என்ன பேசினேன் என்று தெரியும். மீடியாவிடம் நான் வைக்கும் கோரிக்கை என்னவென்றால் அந்த 20 செகன்ட் வீடியோவை மட்டும் வைத்து முடிவு எடுக்காதீர்கள். ஒருவரை நக்கல் செய்வதிலோ கிண்டல் செய்வதிலோ எனக்கு உடன்பாடில்லை. சினிமாவில் இன்னும் நான் சாதிக்க வேண்டிய விஷயம் நிறைய இருக்கு" என்று பேசினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்