என் மலர்
சினிமா செய்திகள்
என் சொந்த வாழ்க்கை பற்றி பேசுபவர்களின் பேச்சை கண்டு கொள்ளமாட்டேன் - நடிகை ராஷ்மிகா
- நடிகை ராஷ்மிகா தற்போது விஜய்யுடன் 'வாரிசு' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
- இவர் தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலளித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, கன்னட திரையுலகில் பிரபல நடிகையாக இருக்கும் ராஷ்மிகா மந்தனா, தற்போது விஜய்யுடன் வாரிசு படத்தில் ஜோடியாக நடித்து வருகிறார். சமீபத்தில் ராஷ்மிகா கன்னட பட உலகை அவமதித்து பேசியதாகவும், இதற்காக அவருக்கு கன்னட படங்களில் நடிக்க தடைவிதிப்பது குறித்து அங்குள்ள தயாரிப்பாளர்கள் ஆலோசிப்பதாகவும் தகவல் பரவியது.
ராஷ்மிகா மந்தனா
மேலும், ரிஷப் ஷெட்டி நடித்து இயக்கியுள்ள 'காந்தாரா' திரைப்படத்தை பார்க்கவில்லை என்று கூறியதும் இவர் மீது கன்னட சினிமாவில் வெறுப்புணர்வு உண்டாக காரணமாக அமைந்தது. இந்த நிலையில், இந்த பிரச்சனை தொடர்பாக நடிகை ராஷ்மிகா மந்தனா விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, " காந்தாரா திரைப்படத்தை பார்த்து விட்டு படக்குழுவினருக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளேன். படம் வெளியான சமயத்தில் ஷூட்டிங்கில் பிசியாக இருந்ததால் பார்க்கவில்லை" என்று விளக்கமளித்துள்ளார்.
ராஷ்மிகா மந்தனா
மேலும், தன்னை பற்றிய விமர்சனங்களுக்கு பதிலளித்துள்ள அவர், "வாய்க்கு வந்தபடி பேசுறவங்க பேசட்டும். ஆனால், உண்மை அவர்களுக்கு தெரியாது. அதையெல்லாம் நான் பொருட்படுத்தவில்லை. சினிமாவில் என் நடிப்பில் ஏதாவது குறை இருந்தால் சொல்லுங்கள் அதை திருத்திக் கொள்ள நிச்சயம் உழைப்பேன். சொந்த வாழ்க்கையை பற்றி பேசுபவர்களின் பேச்சை கண்டு கொள்ள மாட்டேன். இதுவரை எனக்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை" எனக் கூறியுள்ளார்.