என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா செய்திகள்
திரைப்படத்துறையில் தொழிலாளர்களுக்கு தொடர்ந்து ஆபத்தான நிலையே இருந்து வருகிறது.. ஆர்.கே.செல்வமணி
- திரைப்பட இயக்குனரும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் தலைவருமான ஆர்.கே.செல்வமணி சென்னை வடபழனியில் உள்ள ஃபெப்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
- அப்போது திரைப்படத்துறையில் தொழிலாளர்களுக்கு ஆபத்தான நிலை இருப்பதாக அவர் தெரிவித்தார்.
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சங்கத்தலைவர் ஆர்.கே.செல்வமணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 'திரைப்படத்துறையில் தொழிலாளர்களுக்கு தொடர்ந்து ஆபத்தான, சிரமமான நிலையிலேயே இருந்து வருகிறது. மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை திரைப்படத் தயாரிப்பாளர்களிடமும், சின்னத்திரை தயாரிப்பாளர்களிடமும் கலந்துபேசியோ, வற்புறுத்தியோ, வேண்டுகோள் விடுத்தோ எங்கள் சம்பளத்தை ஓரளவு உயர்த்தி வருகிறோம்.
திரைப்படத் துறையில் சாதாரண தொழிலாளர்கள் சம்பளம் இன்று ரூ. 1000/- தொடுவதற்கு 100 ஆண்டுகள் கடக்க வேண்டியுள்ளது. மத்திய, மாநில அரசுகள் திரைப்படத் துறைக்கு செய்யும் உதவிகள் மேலோட்டமாகவே நின்று விடுகின்றன. அஸ்திவாரமான தொழிலாளர்களை அவை சென்றடைவதில்லை. இதுவரை திரைப்படத்துறையில் பணிபுரியும்போது நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். அவர்கள் குடும்பங்களை காப்பாற்ற எந்த வழியும் இல்லை. ரஜினி, கமல் போன்ற உச்ச நட்சத்திரங்களின் படங்களில் பணிபுரியும்போது இறந்தால் மட்டுமே அவர்களுக்கு ஏதோ ஒரு உதவி கிடைக்கிறது. ஆனால் சிரமப்பட்டு திரைப்படம் தாயாரிக்கின்ற சிறு தயாரிப்பாளர்களின் படங்களில் பணிபுரியும்போது விபத்து ஏறபட்டால் அவர்களை காப்பாற்ற எந்த நாதியுமில்லை.
எனவே, திரைப்படத்துறையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு நேரடியாக உதவி செய்யுமாறு மத்திய, மாநில அரசுகளை கேட்டுக்கொள்கிறோம். வருகின்ற நிதியாண்டு பட்ஜெட்டில் திரைப்படத் தொழிலாளர்களுக்கு நேரடியாக உதவிகள் வழங்குகின்ற திட்டத்தை அறிவிக்குமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.