search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    சுதீப் ஹேர்ஸ்டைலால் வந்த பிரச்சினை.. சலூன் கடைக்காரருக்கு கடிதம் எழுதிய தலைமை ஆசிரியர்
    X

    கிச்சா சுதீப்

    சுதீப் ஹேர்ஸ்டைலால் வந்த பிரச்சினை.. சலூன் கடைக்காரருக்கு கடிதம் எழுதிய தலைமை ஆசிரியர்

    • நடிகர் சுதீப் இந்தி, தெலுங்கு, தமிழ் என பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.
    • இவர் நடிப்பில் வெளியான கப்ஜா திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

    கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான கிச்சா சுதீப், 1997 ஆண்டு வெளியான தயாவ்வா என்ற கன்னட படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். இந்தி, தெலுங்கு, தமிழ் என பல மொழி படங்களில் நடித்து வருகிறார். தமிழில் நான் ஈ படத்தின் மூலம் மிகவும் பிரலமடைந்த சுதீப், விஜய்யின் புலி படத்திலும் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான கப்ஜா திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.


    இதையடுத்து இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர் கிச்சா சுதீப் நடிப்பில் கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியான 'ஹெப்பிலி' என்ற திரைப்படத்தில் சுதீப் தலையில் ஒரு பக்கத்தில் முடியை வெட்டி இன்னொரு பக்கம் நீளமாக விட்டு வித்தியாசமான ஹேர்ஸ்டைலில் நடித்திருப்பார். இது தற்போது வரை ட்ரெண்டிங்கில் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் மாணவர்கள் பலர் இது போன்ற ஹேர்ஸ்டைலுடன் பள்ளிக்கு செல்கின்றனர்.

    மாணவர்களின் இந்த ஹேர்ஸ்டைலினால் ஆத்திரமடைந்த கர்நாடகா, பாகல்கோட் மாவட்டம், சிவாஜி நாயக் அரசு பள்ளி தலைமை ஆசிரியர், சலூன் கடைக்காரர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், கோடை விடுமுறைக்கு பின் மாணவர்கள் "ஹெப்பிலி படத்தின் சுதீப் சிகை அலங்காரத்தை போன்று தலையில் ஒரு ஓரத்தில் முடியை வெட்டிவிட்டு மற்றொரு ஓரத்தில் முடியை நீளமாக வைத்துக்கொண்டு வருகிறார்கள்.


    நாங்கள் அனைத்து மாணவர்களிடமும் முறையான ஹேர்ஸ்டைலில் வரும்படி அறிவுறுத்தியுள்ளோம். ஆனாலும், சிலர் அப்படிதான் வருகிறார்கள். மாணவர்கள் சினிமாவினால் மிகவும் எளிமையாக ஈர்க்கபட்டு விடுகிறார்கள். இந்த பழக்கத்தால் கல்வியில் அவர்களுக்கு ஆர்வம் குறைகிறது. பள்ளி மாணவர்கள் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி தலைமுடியை திருத்துங்கள். ஹெப்பிலி பட சுதீப் பாணியில் ஹேர்ஸ்டைல் செய்ய வேண்டாம்" என்று குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பாகி உள்ளது.

    Next Story
    ×