என் மலர்
சினிமா செய்திகள்
எளிமையான மனிதர் பவதாரிணி- சுசீந்திரன் இரங்கல்
- பவதாரிணி நேற்று இலங்கையில் காலமானார்.
- இவரது மறைவிற்கு பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இளையராஜாவின் மகளும் பின்னணி பாடகியுமான பவதாரிணி பல பாடல்களை பாடியுள்ளார். மேலும் சில படங்களுக்கு இசையமைத்தும் உள்ளார். இவரது கணவர் விளம்பர நிர்வாகியாக உள்ளார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. 47 வயதான பாடகி பவதாரிணி புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர். இவர் ஆயுர்வேத மருத்துவ சிகிச்சைக்காக இலங்கைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
கடந்த 5 மாதங்களாக உடல் நல பிரச்சனையில் இருந்த பவதாரிணி இலங்கையில் நேற்று காலமானார். இவரது மறைவு திரைத்துறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது உடல் இன்று மாலை சென்னைக்கு கொண்டு வரப்படுகிறது. இவரது மறைவிற்கு திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இயக்குனர் சுசீந்திரன் இரங்கல் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "சகோதரி பவதாரிணி மறைவு ரொம்ப அதிர்ச்சியாக இருக்கிறது. ஆறு மாதங்களுக்கு முன்பு பாரதிராஜா வீட்டு நிகழ்ச்சியில் அவரை சந்தித்தேன். மிகவும் நன்றாக பேசினார். ரொம்ப எளிமையான ஒரு மனிதர். இளையராஜா சார், கார்த்தி மற்றும் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று வருதத்துடன் தெரிவித்துள்ளார்.