search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    திருநங்கை கதாபாத்திரத்தில் சுஷ்மிதா சென்.. வைரலாகும் புகைப்படம்..
    X

    சுஷ்மிதா சென்

    திருநங்கை கதாபாத்திரத்தில் சுஷ்மிதா சென்.. வைரலாகும் புகைப்படம்..

    • நடிகை சுஷ்மிதா சென் ‘தாலி’ என்ற வெப் தொடரில் நடித்து வருகிறார்.
    • இதன் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

    தமிழில், நாகார்ஜுனா ஜோடியாக 'ரட்சகன்' படத்தில் நடித்தவர் சுஷ்மிதா சென். அர்ஜுன் நடித்த 'முதல்வன்' படத்தில் ஷக்கலக்க பேபி பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார். இந்தியில் அதிக படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். 46 வயதாகும் சுஷ்மிதா சென் தற்போது வரை திருமணம் செய்து கொள்ளவில்லை. 2 பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.


    சுஷ்மிதா சென்

    இவர் தற்போது வெப் தொடர்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். அதன்படி, சுஷ்மிதா சமூக ஆர்வலரும், திருநங்கைகளுக்காக குரல் கொடுக்கும் கவுரி சாவந்த் என்ற திருநங்கையின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவாகி வரும் 'தாலி' என்ற வெப் தொடரில் திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த தொடரை தேசிய விருது பெற்ற ரவி ஜாதவ் இயக்குகிறார்.


    தாலி போஸ்டர்

    இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள சுஷ்மிதா சென், "இந்த அழகான நபரை சித்தரித்து அவரது கதையை உலகிற்கு கொண்டு வந்ததை விட வேறு எதுவும் என்னை பெருமையுடனும் நன்றியுடனும் இருக்க செய்யவில்லை. வாழ்வதற்கும், கண்ணியத்துடன் வாழ்வதற்கும் அனைவருக்கும் உரிமை உண்டு" எனக் குறிப்பிட்டுள்ளார்.



    Next Story
    ×