search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    என் வயது என்னை மாற்றாது.. நான் அதன் வழியை மாற்றுவேன்- புதிய உத்வேகத்தில் ஜோதிகா
    X

    ஜோதிகா

    என் வயது என்னை மாற்றாது.. நான் அதன் வழியை மாற்றுவேன்- புதிய உத்வேகத்தில் ஜோதிகா

    • ஜியோ பேபி இயக்கவுள்ள "காதல் - தி கோர்" என்ற படத்தில் மம்முட்டி மற்றும் ஜோதிகா இணைந்து நடிக்கின்றனர்.
    • இப்படத்தின் மூலம் பல வருடங்களுக்கு பிறகு, மலையாள சினிமாவில் ஜோதிகா ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார்.

    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையான ஜோதிகா, திருமணத்துக்கு பிறகு சில வருடங்கள் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார். பின்னர் 36 வயதினிலே படம் மூலம் மீண்டும் நடிக்க தொடங்கினார். இதை தொடர்ந்து மகளிர் மட்டும், நாச்சியார், காற்றின் மொழி, ராட்சசி, ஜாக்பாட், பொன்மகள் வந்தாள், உடன் பிறப்பு உள்ளிட்ட கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடித்தார்.

    காதல்

    தற்போது இவர் மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான மம்முட்டியுடன் புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். மம்முட்டி கம்பெனி தயாரிக்கும் இப்படத்தை மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான 'தி கிரேட் இந்தியன் கிட்சன்' படத்தை இயக்கிய ஜியோ பேபி இயக்கவுள்ளார். ஜோதிகாவின் பிறந்த நாளான நேற்று முன்தினம் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு படத்திற்கு 'காதல் - தி கோர்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்தது.

    ஜோதிகா

    இந்நிலையில் ஜோதிகா கடின உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில், "இந்த பிறந்தநாளுக்கு உடல் நலத்தையும் பலத்தையும் எனக்கு நான் பரிசாக தந்துக்கொள்கிறேன். வயது என்ன, என்னை மாற்றுவது, அந்த வயதை நான் மாற்றுகிறேன்!" என்று குறிப்பிட்டு உள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    Next Story
    ×