என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா செய்திகள்
விரைவில் மிரட்ட வருகிறது 'அரண்மனை-5'
- இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் இறுதியில் அல்லது டிசம்பரில் தொடங்கும் என கூறப்படுகிறது.
- இயக்குனர் சுந்தர்.சி. தற்போது வடிவேலுவை வைத்து ‘கேங்கர்ஸ்’ படத்தை இயக்கி வருகிறார்.
தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், கதாநாயகனாவும் நடிப்பவர் சுந்தர்.சி. இவர் 'முறைமான்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆனார். தொடர்ந்து பல படங்களை இயக்கியும் நடித்தும் உள்ளார்.
கடந்த 2014-ம் ஆண்டு நகைச்சுவை மற்றும் திகில் கொண்ட 'அரண்மனை' படத்தை சுந்தர் சி. இயக்கினார். இதில் சுந்தர் சி, வினய், ஹன்சிகா மோட்வானி, லட்சுமி ராய், ஆண்ட்ரியா, சந்தானம், கோவை சரளா, மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர். இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து அரண்மனை-2, அரண்மனை-3 மற்றும் அரண்மனை-4 ஆகிய படங்கள் வெளிவந்தன. அரண்மனை-4 படத்திற்கு அதிக வரவேற்பு கிடைத்ததால் அடுத்ததாக இதன் 5-ம் பாகத்தை எடுக்கும் திட்டத்தில் சுந்தர்.சி இருப்பதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி 'அரண்மனை-5' படப்பிடிப்புக்கான ஏற்பாடுகள் தொடங்கி உள்ளதாகவும், இப்படத்தில் நடிக்க உள்ளவர்களின் விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் இறுதியில் அல்லது டிசம்பரில் தொடங்கும் என கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து இப்படத்தை அடுத்தாண்டு கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இயக்குனர் சுந்தர்.சி. தற்போது வடிவேலுவை வைத்து 'கேங்கர்ஸ்' படத்தை இயக்கி வருகிறார். இதனையடுத்து 'மூக்குத்தி அம்மன்' படத்தின் இரண்டாம் பாகத்தையும் இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.