என் மலர்
சினிமா செய்திகள்
X
புத்தாண்டில் வெளியாகும் 'ரத்னம்' படத்தின் முதல் சிங்கிள்
Byமாலை மலர்31 Dec 2023 3:12 PM IST
- கவுதம் மேனன், சமுத்திரகனி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
- படம் அடுத்தாண்டு கோடையில் வெளியாகிறது.
இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவாகி வரும் 'ரத்னம்' திரைப்படத்தில் நடிகர் விஷால் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். மேலும், கவுதம் மேனன், சமுத்திரகனி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இப்படத்தினை தமிழ் திரைப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் கார்த்திக் சுப்பாராஜின் 'ஸ்டோன் பெஞ்ச்' தயாரிப்பு நிறுவனத்தோடு ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படம் அடுத்தாண்டு கோடையில் வெளியாகிறது. இதையடுத்து படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடலான 'வாராய் ரத்னம்' நாளை காலை 7 மணிக்கு வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Next Story
×
X