என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    `கேங்கர்ஸ் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் நாளை வெளியீடு
    X

    `கேங்கர்ஸ்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் நாளை வெளியீடு

    • இயக்குனர் சுந்தர் சி மற்றும் காமெடி நடிகர் வடிவேலு கேங்கர்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் இணைந்துள்ளனர்.
    • கேங்கர்ஸ் திரைப்படம் ஏப்ரல் 24ம் தேதி வெளியாக இருக்கிறது.

    நீண்ட இடைவேளைக்குப் பிறகு இயக்குனர் சுந்தர் சி மற்றும் காமெடி நடிகர் வடிவேலு கேங்கர்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் இணைந்துள்ளனர்.

    சுந்தர் சி மற்றும் வடிவேலு கூட்டணி மிகப்பெரிய சக்சஸ் கூட்டணி என்று கோலிவுட் திரையுலகில் கூறப்பட்ட நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடு காரணமாக பல ஆண்டுகளாக இருவரும் திரைப்படத்தில் இணையாமல் இருந்தனர்.

    15 வருடங்களுக்குப் பிறகு இணையும் சுந்தர் சி மற்றும் வடிவேலு காமெடி கூட்டணி ரசிகர்கள் ரசிக்கும் வகையில் இருக்கும் என்றும் கைப்புள்ள, வீரபாகு மாதிரி சிங்காரம் என்ற கேரக்டரில் கேங்கர்ஸ் படத்தில் வடிவேலு நடித்து இருப்பதாகவும் செய்திகள் வெளியானது.

    இந்நிலையில் கேங்கர்ஸ் திரைப்படம் ஏப்ரல் 24ம் தேதி வெளியாக இருக்கிறது. படத்தின் டிரெய்லரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. வடிவேலு இப்படத்தில் பல கெட்டப்புகளில் நடித்துள்ளார். படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

    படக்குழு வெளியிட்ட போஸ்டரில் `குப்பன் தொல்ல தாங்கலயே இவ நாலு நாளா தூங்கலயே" என்ற வசனம் இடம் பெற்றுள்ளது. இப்பாடல் Item Song- ஆக உருவாகியுள்ளது.

    Next Story
    ×