என் மலர்
சினிமா செய்திகள்
கமல்ஹாசன் பாடிய மெய்யழகன் பாடலின் லிரிக் வீடியோ வெளியானது
- இப்படத்தில் அரவிந்த்சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
- இப்படம் செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
96 பட இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள படம் மெய்யழகன். 'கார்த்தியின் 27'-வது படமான இந்த படத்தை சூர்யா- ஜோதிகாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளது.
இப்படத்தில் அரவிந்த்சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று கோயம்புத்தூரில் மிக பிரம்மாண்ட முறையில் நடைபெற்றது. 96 திரைப்படத்திற்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா இப்படத்திற்கும் இசையமைத்துள்ளார்.
இப்படத்தில், 'நான் போகிறேன்' மற்றும் 'யாரோ இவன் யாரோ' எனத் துவங்கும் இரு பாடல்களை நடிகர் கமல்ஹாசன் பாடியுள்ளார்.
இந்நிலையில் மெய்யழகன் படத்தில் பாடல்கள் பாடிய உலகநாயகன் கமல்ஹாசனுக்கு நடிகர் சூர்யா நன்றி தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து யாரோ இவன் யாரோ என்ற பாடல் உருவான விதமும், கமல்ஹாசன் பாடியதும் தற்பொழுது படக்குழு வெளியிட்டுள்ளனர்.
இப்பாடல் மிகவும் எமோஷனலாக அமைந்து இருக்கிறது. கமல்ஹாசனின் குரல் இப்பாடலிற்கு உயிரோட்டத்தை தந்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.