என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா செய்திகள்
கேம் சேஞ்சர் திரைப்படத்தின் 3- வது சிங்கிள் அப்டேட் கொடுத்த படக்குழு
- ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் என்ற படத்தில் ராம் சரண் நடித்துள்ளார்.
- இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இப்படத்தின் கதையை எழுதியுள்ளார்.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர் ராம் சரண் கடைசியாக ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்திருந்தார். அடுத்ததாக தமிழின் முன்னணி இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் என்ற படத்தில் ராம் சரண் நடித்துள்ளார். இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இப்படத்தின் கதையை எழுதியுள்ளார்.
இப்படத்தில் கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரக்கனி, நாசர் மற்றும் பலர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமன் இந்த படத்திற்கு இசையமைக்க, ஒளிப்பதிவு பணிகளைத் திருநாவுக்கரசு மேற்கொண்டுள்ளார்.
கேம் சேஞ்சர் படத்தின் "ஜரகண்டி" மற்றும் 'ரா மச்சா மச்சா' பாடல்கள் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. திரைப்படம் பொங்கலை முன்னிட்டு அடுத்தாண்டு ஜனவரி 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் படத்தின் மூன்றாம் பாடலை வரும் நவம்பர் 28 ஆம் தேதி வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதுக்குறித்து படக்குழு புது போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.