என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
சினிமா செய்திகள்
![கவின் நடிக்கும் 4 -வது படத்தின் டைட்டில் நாளை வெளியீடு கவின் நடிக்கும் 4 -வது படத்தின் டைட்டில் நாளை வெளியீடு](https://media.maalaimalar.com/h-upload/2025/02/09/9121609-newproject-2025-02-09t183815777.webp)
கவின் நடிக்கும் 4 -வது படத்தின் டைட்டில் நாளை வெளியீடு
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- டாடா மற்றும் ப்ளடி பெக்கர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கவின் இப்படத்தில் நடித்துள்ளார்
- அயோத்தி பட நாயகி ப்ரீத்தி அஸ்ரானி கதாநாயகியாக நடித்துள்ளார்
தமிழ் திரையுலகின் முன்னணி நடன இயக்குனர் சதீஷ், இவர் முதல் முறையாக இயக்குனராக அறிமுகமாகிறார். டாடா மற்றும் ப்ளடி பெக்கர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கவின் இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். பெயரிடப்படாத இப்படத்தில் அயோத்தி பட நாயகி ப்ரீத்தி அஸ்ரானி கதாநாயகியாக நடிக்க ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரித்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு பணி சமீபத்தில் முடிவடைந்த நிலையில். படத்தின் டைட்டிலை நாளை மாலை 5 மணிக்கு வெளியிடப்போவதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. போஸ்டரில் கவின் ஸ்டைலிஷ் தோற்றத்தில் guitar- உடன் இருக்கிறார்.
இப்படத்திற்கு ஹரீஷ் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை ஆர்சி பிரனவ் கவனிக்கிறார். படத்தின் இசையை ஜென் மார்டின் மேற்கொள்கிறார். இப்படத்திற்கு கிஸ் என தலைப்பு வைத்துள்ளதாக தகவல் பரவி வருகின்றன. இத்திரைப்படம் ஒரு ரோம் - காம் கதையம்சத்தில் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.