search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    மலையாள நடிகர் சங்கம் கலைக்கப்பட்டதில் உடன்பாடு இல்லை- நடிகைகள் போர்க்கொடி
    X

    மலையாள நடிகர் சங்கம் கலைக்கப்பட்டதில் உடன்பாடு இல்லை- நடிகைகள் போர்க்கொடி

    • நடிகை ஸ்ரீலேகா மித்ரா, கேரள திரைப்பட இயக்குனர் ரஞ்சித் மீது பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்தார்.
    • நடிகர் சங்க தலைவர் மோகன்லால் உள்பட 17 நிர்வாகிகள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.

    பெரும்பாவூர்:

    கேரள மாநிலத்தில் ஹேமா கமிஷனின் அறிக்கையை தொடர்ந்து மேற்கு வங்க நடிகை ஸ்ரீலேகா மித்ரா, கேரள திரைப்பட அகாடமியின் தலைவரும், இயக்குனருமான ரஞ்சித் மீது பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்தார்.

    கவர்ச்சி நடிகை மினு, நடிகர்கள் ஜெயசூர்யா, இடவேள பாபு, முகேஷ் எம்.எல்.ஏ., மணியன் பிள்ளை ராஜு ஆகிய 4 பேர் மீது பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்து இருந்தார். மலையாள சினிமாவில் பட வாய்ப்புக்காக தங்களுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை நடிகைகள் தெரிவித்து வருவது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மலையாள திரைப்பட நடிகர் சங்கமான அம்மா அமைப்பின் நிர்வாகிகள் மீது நடிகைகள் பாலியல் குற்றச்சாட்டை தெரிவித்ததை அடுத்து, தார்மீக பொறுப்பேற்று அதன் தலைவரும், நடிகருமான மோகன்லால் உள்பட 17 நிர்வாகிகள் தங்களது பதவியை நேற்று முன்தினம் கூண்டோடு ராஜினாமா செய்தனர். அதோடு செயற்குழுவும் கலைக்கப்பட்டது.

    இந்த நிலையில் மலையாள நடிகர் சங்க உறுப்பினர்களும், நடிகைகளுமான சரயு, அனன்யா ஆகியோர் நிர்வாகிகள் ராஜினாமா மற்றும் செயற்குழுவை கலைத்த முடிவில் எங்களுக்கு உடன்பாடு இல்லை என்றும், பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள் தான் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து உள்ளதாக தெரிவித்து உள்ளனர். எனவே, நாங்கள் ராஜினாமா செய்யவில்லை என்று கூறினர்.

    இதேபோல் நடிகர்கள் வினு மோகன், டோவினோ தாமஸ், ஜெகதீஷ் ஆகியோர் மலையாள நடிகர் சங்க நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்ததில் எங்களுக்கு விருப்பம் இல்லை என்று தெரிவித்தனர்.

    இதனால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

    Next Story
    ×