search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    இளவரசி ஸ்ருதிஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த டிரெயின் படக்குழு
    X

    இளவரசி ஸ்ருதிஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த டிரெயின் படக்குழு

    • இயக்குநர் மிஸ்கின் மற்றும் நடிகர் விஜய் சேதுபதி கூட்டணியில் "டிரெயின்" என்ற திரைப்படம் உருவாகிறது.
    • கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இந்தப் படத்தின் அறிமுக வீடியோ சில நாட்களுக்கு முன் வெளியானது.

    இயக்குநர் மிஸ்கின் மற்றும் நடிகர் விஜய் சேதுபதி கூட்டணியில் "டிரெயின்" என்ற திரைப்படம் உருவாகிறது. கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இந்தப் படத்தின் அறிமுக வீடியோ சில நாட்களுக்கு முன் வெளியானது.

    இந்தப் படத்தில் ஸ்ருதி ஹாசன், நரேன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு பணிகளை ஃபௌசியா பாத்திமா மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை ஸ்ரீவத் மேற்கொள்கிறார். இந்தபடத்தின் இசையை இயக்குனர் மிஷ்கின் மேற்கொண்டுள்ளார். படத்தில் ஒரு பாடலை ஸ்ருதிஹாசன் பாடியுள்ளார். இன்று பிறந்தநாள் காணும் ஸ்ருதிஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்து படக்குழு போஸ்டர் மற்றும் வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்தப் படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    Next Story
    ×