என் மலர்
சினிமா செய்திகள்

வாடிவாசல் ஷூட்டிங் அப்டேட் - வெளியான புது தகவல்

- வாடிவாசல் திரைப்படத்தை கலைப்புலி எஸ் தானு தயாரிக்கிறார்.
- இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.
இயக்குநர் வெற்றி மாறன் மற்றும் நடிகர் சூர்யா கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் வாடிவாசல். இந்தப் படம் தொடர்பான அறிவிப்பு வெளியானது முதல், இதற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து விட்டது. சமீபத்தில், வாடிவாசல் படத்தின் இசை பணிகள் துவங்கிவிட்டதாக இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் அறிவித்து இருந்தார்.
இந்த நிலையில், வாடிவாசல் திரைப்படம் குறித்த புதிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி இந்தப் படத்தின் திரைக்கதை சார்ந்த பணிகள் இன்னும் முழுமை பெறவில்லை என்றும், இதன் காரணமாக படப்பிடிப்பு தொடங்க தாமதமாகி வருவதாக கூறப்படுகிறது.
திரைக்கதை சார்ந்த பணிகள் முழுமை பெற்ற பிறகு, இந்த ஆண்டு இறுதியில் வாடிவாசல் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாடிவாசல் திரைப்படம் ஜல்லிக்கட்டு சம்பந்தப்பட்ட கதையை கொண்டிருக்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. மேலும், இதற்காக சூர்யா சிறப்பு பயிற்சிகள் எடுத்து வருவதாகவும், படத்தில் பயன்படுத்துவதற்காக மாடு ஒன்றும் வாங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.
வாடிவாசல் திரைப்படத்தை கலைப்புலி எஸ் தானு தயாரிக்கிறார். இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்தப் படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்களை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.