என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா செய்திகள்
'அடி கட்டழகு கருவாச்சி' வீடியோ பாடல் வெளியீடு
- யூ ட்யூபில் இதுவரை 2.5 மில்லியன் வியூஸ்களை அள்ளியுள்ளது கள்வன் படத்தின் டிரெயிலர்.
- இந்நிலையில் படத்தின் பாடலான 'அட கட்டழகு கருவாச்சி' வீடியோ பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
ஒளிப்பதிவாளர் பி வி ஷங்கரின் இயக்கத்தில் ஜி.வி பிரகாஷ் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் கள்வன். ஜனவரி மாதம் இப்படத்தின் டீசர் வெளியானது. பாரதிராஜா, இவானா மற்றும் தீனா முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் ஏப்ரல் 4 வெளியாகவுள்ளது.
டில்லி பாபு இப்படத்தை தயாரித்துள்ளார். ஜி வி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ராட்சசன், மரகத நாணயம், முண்டாசுப்பட்டி படத்திற்கு ஒளிப்பதிவு செய்தவர் இப்படத்தின் இயக்குனரான பி.வி.ஷங்கர் என்பது குறிப்பிடத்தக்கது.
படத்தின் டிரெயிலர் கடந்த வாரம் வெளியிடப்பட்டது. படத்தின் டிரெயிலருக்கு மக்களிடையெ மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. யூடியூபில் இதுவரை 2.5 மில்லியன் வியூஸ்களை அள்ளியுள்ளது கள்வன் படத்தின் டிரெயிலர்.
இந்நிலையில் படத்தின் பாடலான 'அட கட்டழகு கருவாச்சி' வீடியோ பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இப்பாடல் வெளியானபோதே மிக ஹிட்டாகியது. தற்பொழுது இப்பாடலின் வீடியோ வெளியிடப்பட்டதால் ரசிகர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இப்பாடலின் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.