என் மலர்
சினிமா செய்திகள்

அஜித்துக்கு போன் செய்த விஜய்.. முதல் ஆளாக வாழ்த்தியதே அவர் தான் - சுரேஷ் சந்திரா சொன்ன சீக்ரெட்

- 30 வருட கலைத்துறை சேவையை பாராட்டி அவருக்கு பத்ம பூஷன் விருது அறிவித்தது.
- இருவருக்குள்ளும் ஆத்மார்த்தமான நட்பு இருக்கிறது.
தமிழின் முன்னணி நடிகர்களாக வளம் வரும் அஜித் மற்றும் விஜயை ரசிகர்கள் போட்டியாளர்களாக பார்க்கின்றனர். ஆனால் இருவரும் தனிப்பட்ட முறையில் நண்பர்களாகவே இருந்து வருகின்றனர். தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி விஜய் அரசியலில் நுழைந்துள்ளார்.
அதேநேரம் ரேஸிங்கில் அஜித் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இப்படி இருவரும் தத்தமது பணிகளில் பிஸியாக இருந்து வருகின்றனர். சமீபத்தில் துபாயில் நடந்த 24H சீரிஸ் கார் பந்தயத்தில் அஜித் குமார் ரேசிங் அணி மூன்றாவது இடம் பிடித்து அசத்தியது.
மேலும் அஜித்தின் 30 வருட கலைத்துறை சேவையை பாராட்டி அவருக்கு மத்திய அரசு பத்ம பூஷன் விருது அறிவித்தது. இந்நிலையில் அரசியலில் விஜய் களமாடி வரும் நிலையில் அவரின் செயல்பாடுகளை எக்ஸ்ரே கண்கள் கொண்டு பார்க்கும் போக்கு அதிகரித்துள்ளது.
அந்த வகையில் அஜித் ரேஸில் மூன்றாம் இடம் பிடித்ததற்கோ, அவருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டதற்கோ விஜய் வாழ்த்து சொல்லவில்லை என ஒரு கூட்டம் சர்ச்சையை கிளப்பியது.
இருவரின் பாதைகள் பிரிந்தாலும் அவர்களை மீண்டும் போட்டியாளர்கள் தராசில் வைத்து இந்த கருத்துக்கள் பரவின. இந்நிலையில் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
சுரேஷ் சந்திரா கூறுகையில், அஜித் சார் ரேஸில் வெற்றி பெற்றதும் விஜய் சாரிடம் இருந்துதான் முதல் வாழ்த்து வந்தது. அதேபோல சாருக்கு விருது அறிவிக்கப்பட்டதும், விஜய் சாரிடமிருந்து வாழ்த்து வந்தது. இருவருக்குள்ளும் ஆத்மார்த்தமான நட்பு இருக்கிறது. விஜய் சார் வாழ்த்து சொல்லவில்லை என்பதில் துளியும் உண்மை இல்லை என்று தெரிவித்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்