search icon
என் மலர்tooltip icon

    முன்னோட்டம்

    தயாரிப்பாளர் எஸ்.நந்தகோபால், மெட்ராஸ் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில், அன்ஷு பிரபாகர் பிலிம்ஸ் உடன் இணைந்து தயாரிக்கும் 13 படத்தின் முன்னோட்டம்.
    ஜி.வி.பிரகாஷ் குமார், கவுதம் வாசுதேவ் மேனன் இணைந்து சமீபத்தில் வெளியான ‘செல்ஃபி’ படத்தில் பாராட்டத்தக்க நடிப்பை வெளிப்படுத்தினர். இந்த வெற்றி கூட்டணி இப்போது '13' என்ற தலைப்பில் மற்றொரு திரைப்படத்தில் இணைந்து பணியாற்றுகிறார்கள். இப்படத்தில் இருவரும் மிக முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தயாரிப்பாளர் எஸ்.நந்த கோபால், மெட்ராஸ் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில், அன்ஷு பிரபாகர் பிலிம்ஸ் உடன் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார். 

    ஒரு மர்மமான விசாரணை திகில் திரைப்படமாக, உருவாகும் இப்படத்தை கே.விவேக் இயக்குகிறார். நடிகர்கள் குழுவில் ஆதியா, பவ்யா, ஐஸ்வர்யா, ஆதித்யா கதிர் உடன் மற்றும் பலர் இணைந்து நடிக்கின்றனர்.

    சித்து குமார் இசையமைக்க, சி.எம்.மூவேந்தர் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.
    நடிகர் துல்கர் சல்மான், ஹனு ராகவாபுடி கூட்டணியில், ஸ்வப்னா சினிமாஸ் தயாரிப்பில், “சீதா ராமம்” திரைப்படம், ஆகஸ்ட் 5 ஆம் தேதி, உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
    வைஜெயந்தி மூவிஸ் வழங்கும், ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் காதல் திரைப்படமான “சீதா ராமம்” படத்தில் இளமை நாயகன் துல்கர் சல்மான் நடிக்கிறார், அழகு தேவதை மிருணாள் தாகூர் நாயகியாக நடிக்க, மிகவும் சிறப்பு வாய்ந்த பாத்திரத்தில் ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். காதல் கதைகளை மயக்கும் விதத்தில் சித்தரிப்பதில் பெயர் பெற்ற ஹனு ராகவாபுடி இப்படத்தை இயக்குகிறார், ஸ்வப்னா சினிமா சார்பில் அஸ்வினி தத் இப்படத்தை தயாரிக்கிறார்.

    படத்தின் முன்னோட்டம் மூலம் ரசிகர்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பிறகு, தயாரிப்பாளர்கள் படத்தின் வெளியீட்டு தேதியை தற்போது வெளியிட்டுள்ளனர். “சீதா ராமம்” திரைப்படம் ஆகஸ்ட் 5 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகிறது. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகவுள்ளது.

    தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகும் ‘சீதா ராமம்’ படத்திற்கு PS வினோத் ஒளிப்பதிவு செய்கிறார். கூடுதல் ஒளிப்பதிவை ஸ்ரேயாஸ் கிருஷ்ணா செய்துள்ளார்.
    கார்த்திக் மூவி ஹவுஸ் சார்பில் கார்த்திக் அட்வித் தயாரிக்க, விக்ரம் பிரபு நடிக்கும் அடுத்த திரைப்படத்திற்கு “இரத்தமும் சதையும்” என பெயரிடப்பட்டுள்ளது.
    விக்ரம் பிரபு நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘டாணாக்காரன்’ திரைப்படம் ரசிக்ரகளிடம் பெரும் வரவேற்பை பெற்றதுடன் விமர்சன ரிதீயகாவும் பெரும் பாராட்டுக்களை குவித்தது. குறிப்பாக இப்படத்தில் விக்ரம் பிரபுவின் சிறப்பான நடிப்பு, அனைவராலும் பாராட்டப்பட்டது. உடலை வருத்தி தன்னை அக்கதாப்பாத்திரமாக மாற்றிகொண்டு, வாழ்ந்திருந்தார் விக்ரம் பிரபு. தற்போது அடுத்தடுத்து பல அற்புதமான படைப்புகள் அவரது நடிப்பில் வெளியாக காத்திருக்கின்றன. இந்நிலையில் விகரம் பிரபு நடிப்பில், அறிமுக இயக்குநர் ஹரேந்தர் பாலசந்தர் இயக்க, இயக்குநர் கார்த்திக் அட்வித் தயாரிக்கும் இந்த புதிய திரைப்படத்திற்கு “இரத்தமும் சதையும்” என பெயரிடப்பட்டுள்ளது. 

    விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகும் ‘இரத்தமும் சதையும்’ படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தற்போது துவங்கப்பட்டு பரபரப்பாக நடைபற்று வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்க திட்டமிடப்பட்டுள்ளது. படத்தின் நடிக்கவுள்ள நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.
    முற்றிலும் புதுமுகங்கள் நடித்திருக்கும் ‘மாலைநேர மல்லிப்பூ’ படத்தின் முதல் பார்வை வெளியாகியுள்ளது.
    21 வயதே ஆன புதிய அறிமுக இயக்குனர் சஞ்சய் நாராயண் மிக வித்தியாசமான கதைக்களத்தில், பாலியல் தொழிலாளி ஒருவரின் ஆட்டோகிராஃப் என்று சொல்லக்கூடிய அளவுக்கு இயக்கியிருக்கும் படம் ‘மாலைநேர மல்லிப்பூ’. பாலியல் தொழிலாளி பாத்திரத்தில், பிரபல தியேட்டர் ஆர்டிஸ்டான வினித்ரா மேனன் நடித்துள்ளார். அவரது பத்து வயது மகனாக குழந்தை நட்சத்திரம் அஸ்வின் நடித்துள்ளார்.

    மிக இளம் வயதில் பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்ட லட்சுமியின் வாழ்வின் சில குறிப்பிட்ட காலங்களை, ஆவணப்படுத்தியிருக்கும் இயக்குனர் சஞ்சய், அத்தொழிலில் அவர் சந்திக்கும் வாடிக்கையாளர்கள், அவரது வீட்டு உரிமையாளர், சக பாலியல் தொழிலாளிகள் ஆகியோருடன் அவருக்கு நிகழும் அனுபவங்களை மிக நேர்மையாக காட்சிப்படுத்தியுள்ளார். இந்த சூழலில், தனது இருட்டான பக்கங்களை மறைத்து, பத்து வயதே ஆன, ‘என் அப்பா யார் என்று சதா கேள்வி எழுப்பி வரும் மகனை வளர்த்தெடுக்க அவர் காட்டும் தாய்ப்பாசம் பார்ப்பவர்களை நிச்சயம் நெகிழவைக்கும்.

    பிரத்யேகமாக ஓ.டி.டி. தளங்களை மனதில் வைத்தே உருவாக்கப்பட்ட இந்த ‘மாலைநேர மல்லிப்பூ’ மிக விரைவில் முன்னணி ஓடிடி தளத்தில் வெளியிட பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.
    புதுமுகங்கள் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஓட விட்டு சுடலாமா’ படத்தின் முன்னோட்டம்.
    தமிழில் வித்தியாசமான தலைப்புகளை கொண்ட படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்ப்பார்ப்பு உண்டு. அப்படி வித்தியாசமான தலைப்பை கொண்டு உருவாகி இருக்கும் புதிய படம் ‘ஓட விட்டு சுடலாமா’. எவரிஒன் புரொடக்‌ஷன்ஸ் மூலமாக வினித் மோகன் மற்றும் பிரகாஷ் வேலாயுதன் தயாரித்திருக்கும் இப்படத்தில் புதுமுகங்களான அமீர் சுஹீல், கோபிக்கா ஆகியோர் நாயகன் நாயகியாக நடிக்கிறார்கள். தயாரிப்பாளர் வினித் மோகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இத்திரைப்படத்தை இயக்குனர் ஜிஜேஷ் MV இயக்கி இருக்கிறார்.

    கதாநாயகன் ஒரு ஆட்டோ டிரைவர். அவர் நேசிக்கும் பெண்ணை ஒரு பெரிய தாதா கும்பலை சேர்ந்த ஒருவன் சிதைத்து விட, எந்த வித வலிமையான பின்புலமும் இல்லாத கதாநாயகன் தன்னிடம் அரிதான சக்திகளுடன் வந்து சேரும் ஒரு காரை வைத்துக்கொண்டு அந்த பெரிய தாதா கும்பலை பழிவாங்க புறப்படுகிறான் என்பதே படத்தின் மூலக்கதை. முற்றிலும் புதிய கோணத்தில் பழி வாங்கும் கதையை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள படம் ‘ஓட விட்டு சுடலாமா’ என்று கூறுகிறார் இயக்குனர் ஜிஜேஷ் MV

    கம்பம், குமுளி மற்றும் கேரளா பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் பிரகாஷ் வேலாயுதன், படத்தொகுப்பாளர் ரதீஷ் மோகன், இசை அஷ்வின் சிவதாஸ், ஆகியோர் பணியாற்றி இருக்கிறார்கள்.

    நகைச்சுவை கலந்து உருவாகி இருக்கும் ‘ஓட விட்டு சுடலாமா’ திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து இறுதிகட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீடு வெளியாக இருக்கிறது.
    ரஞ்சித் ஜெயக்கொடியின் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிப்பில் உருவாகி இருக்கும் 'மைக்கேல்' படத்தின் முன்னோட்டம்.
    ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி மற்றும் கரண் சி புரொடக்சன்ஸ் எல்எல்பி ஆகிய நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் திரைப்படம் 'மைக்கேல்'. இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்த பிரம்மாண்டமான ஆக்சன் என்டர்டெய்னர் திரைப்படத்தில் சந்தீப் கிஷன் முதன் முறையாக பான் இந்திய நடிகராக அறிமுகமாகிறார்.

    இவருடன் விஜய் சேதுபதி சிறப்பு அதிரடி வேடத்தில் நடித்திருக்கிறார். பிரபல இயக்குனரும், நடிகருமான கௌதம் வாசுதேவ் மேனன் வில்லனாக நடித்திருக்கிறார். சந்தீப் கிஷனுக்கு ஜோடியாக நடிகை திவ்யன்ஷா கௌசிக் நடிக்கிறார். இவர்களுடன் நடிகை வரலட்சுமி சரத்குமார் மற்றும் நடிகர் வருண் சந்தேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

    மைக்கேல் பட போஸ்டர்
    மைக்கேல் பட போஸ்டர்

    முன்னணி இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடியின் இயக்கத்தில் முதன்முதலாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் தயாராகி, வெளியாகவிருக்கும் ‘மைக்கேல்’ படத்தை நாராயண் தாஸ் கே.நரங் வழங்குகிறார். 'மைக்கேல்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் சமீபத்தில் வெளியிட்டனர்.
    நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'டிரைவர் ஜமுனா' படத்தின் முன்னோட்டம்.
    ‘வத்திக்குச்சி’ படத்தை இயக்கிய இயக்குனர் பா.கின்ஸ்லின் இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் 'டிரைவர் ஜமுனா'. இதில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். இவருடன் 'ஆடுகளம்', நரேன், ஸ்ரீ ரஞ்சனி, 'ஸ்டான்ட் அப் காமடியன்' அபிஷேக், 'ராஜாராணி' பட புகழ் பாண்டியன், கவிதா பாரதி, பாண்டி, மணிகண்டன் ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

    கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். டான் பாலா கலை இயக்கத்தை கவனிக்க, படத்தொகுப்பை ஆர்.ராமர் மேற்கொண்டிருக்கிறார். சாலை பயணத்தை மையப்படுத்திய இந்த திரைப்படத்திற்கு ஒலியின் பங்களிப்பு இன்றியமையாதது என்பதால், படத்தின் ஒலி வடிவமைப்பை, முன்னணி ஒலி வடிவமைப்பு நிறுவனமான ஸிங்க் சினிமா ஏற்றுக்கொண்டிருக்கிறது. இந்த திரைப்படத்தை பிரம்மாண்டமான பொருட்செலவில் 18 ரீல்ஸ் சார்பில், பிரபல குழந்தைகள் நல மருத்துவரும், முன்னணி திரைப்பட தயாரிப்பாளருமான எஸ்.பி.சௌத்ரி தயாரித்திருக்கிறார்.

    டிரைவர் ஜமுனா

    படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக்கை படக்குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள். தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் 'டிரைவர் ஜமுனா' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.
    நடிகர் விமல் நடிப்பில் தயாராகியிருக்கும் புதிய படத்திற்கு 'தெய்வ மச்சான்' என பெயரிடப்பட்டு, அதன் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.
    இயக்குநர் மார்ட்டின் நிர்மல்குமார் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'தெய்வ மச்சான்'. இதில் விமல் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக புதுமுக நடிகை நேகா நடிக்கிறார். இவர்களுடன் பாண்டியராஜன், 'ஆடுகளம்' நரேன், பாலசரவணன், வேல.ராமமூர்த்தி, முருகானந்தம், வத்சன் வீரமணி, தங்கதுரை, பிக் பாஸ் அனிதா சம்பத், தீபா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். 

    கேமில் ஜே. அலெக்ஸ் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு காட்வின் இசை அமைக்கிறார். படத்தின் திரைக்கதையை இயக்குநர் மார்ட்டின் மற்றும் வத்சன் இணைந்து எழுதியிருக்க, படத்தின் பின்னணி இசையை அஜீஷ் கவனிக்கிறார். எடிட்டர் இளையராஜா படத்தொகுப்பை மேற்கொள்கிறார். கிராமிய பின்னணியில் பேண்டசி ஜானரில் தயாராகும் இந்த திரைப்படத்தை உதய் புரொடக்சன்ஸ் மற்றும் மேஜிக் டச் பிக்சர்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் உதயகுமார், கீதா உதயகுமார் மற்றும் எம். பி. வீரமணி ஆகியோர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார்கள்.

    விமல்

    படத்தின் தலைப்பு, பர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் சேதுபதி தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.
    தமிழ் தெலுங்கு, இந்தி , கன்னட மொழிகளில் வெளியாகவிருக்கும் விட்னஸ் படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியானது.
    தூய்மைப் பணியாளர்களின் உலகத்தை மையமாகக் கொண்டிருக்கும் திரைப்படம் “விட்னஸ்”. பெருநகரங்கள் குறித்து நாம் இதுவரை கண்டிராத உண்மைகளையும், கண்ணுக்குப் புலப்படாத வகையில் அங்கே செயல்படும் அதிகார மையங்களையும் நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கிறது. 

    தெலுங்கு மற்றும் கன்னடத் திரைத்துறைகளில் மாபெரும் வெற்றிப்படங்களைத் தயாரித்து வெளியிட்ட ‘தி பீப்பிள் மீடியா பேக்டரி’, ஒரு அழுத்தமான, அதே சமயம் உணர்வுபூர்வமான திரைப்படத்தின் வாயிலாக தமிழ்த் திரையுலகில் காலடி எடுத்து வைக்கிறது. 

    “தி பீப்பிள் மீடியா பேக்டரி” என்ற பேனரின் கீழ் இந்தப் படத்தைத் தயாரித்திருப்பவர் டி.ஜி.விஷ்வபிரசாத். அவருடன் இணைந்து இதைத் தயாரித்திருப்பவர் விவேக் குச்சிபோட்லா.

    இத்திரைப்படத்தை இயக்கி, ஒளிப்பதிவு செய்திருப்பவர் தீபக். திரைக்கதை எழுதியவர்கள் முத்துவேல் மற்றும் ஜே.பி. சாணக்யா. படத்தொகுப்பு செய்திருப்பவர் பிலோமின் ராஜ். இசையமைப்பு செய்திருப்பவர் இரமேஷ் தமிழ்மணி. 

    விட்னஸ்

    ஷ்ரத்தா ஶ்ரீநாத், ரோகிணி, அழகம்பெருமாள், சண்முகராஜா, ஜி. செல்வா, சுபத்ரா ராபர்ட், இராஜீவ் ஆனந்த் மற்றும் எம்.ஏ.கே.இராம் இதில் நடித்துள்ளனர்.  

    தமிழில் நேரடியாக வெளியாகவிருக்கும் இத்திரைப்படம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டுள்ளது.
    மதுரை முத்து மூவிஸ் மற்றும் கனவு தொழிற்சாலை இணைந்து தயாரித்திருக்கும் அக்கா குருவி படத்தின் முன்னோட்டம்.
    மதுரை முத்து மூவிஸ் மற்றும் கனவு தொழிற்சாலை இணைந்து தயாரிக்க, இயக்குநர் சாமி இயக்கத்தில் உருவாகியுள்ள குழந்தைகள் திரைப்படம் ‘அக்காகுருவி’. இசைஞானி இளையராஜா இசையில் தமிழ் சினிமாவின் தரமான படைப்பாக உருவாகியுள்ள இப்படத்தை, பிரபல தியேட்டர் நிறுவனமான PVR பிக்சர்ஸ் நிறுவனம் மே 6 ஆம் தேதி தமிழகமெங்கும் வெளியிடுகிறது. 

    உலகப்புகழ் பெற்ற திரைப்படமான சில்ட்ரன் ஆஃப் ஹெவன் படத்தின் அதிகாரப்பூர்வ மறுபதிப்பாக இப்படம் உருவாகியுள்ளது. ஒரு ஏழை குடும்பத்தில் வசிக்கும் அண்ணன் தங்கை என இரு குழந்தைகள், இவர்களுக்கிடையே ஒரு ‘ஷீ’ - இதை, மனதை உலுக்கும் அற்புத படைப்பாக, உயிர், மிருகம் போன்ற படங்களை இயக்கிய சாமி புதிய முயற்சியாக உருவாகியுள்ளார்.

    அக்கா குருவி

    இப்படத்தில் மூன்று பாடல்கள் இடம்பெறுகிறது. மூன்று பாடல்களையும் இளையராஜாவே எழுதியுள்ளார். சில்ட்ரன் ஆஃப் ஹெவன் படத்தின் மறுபதிப்பான அக்கா குருவியை அதன் ஒரிஜினல் கெடாமல் படமாக்கியுள்ளார் இயக்குநர் சாமி.

    இப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரங்களான 11 வயது அண்ணன், 7 வயது தங்கை கதாபாத்திரங்களுக்கான 200க்கும் மேற்பட்டவர்களை தேர்வு நடத்தி இறுதியாக மாஹின் என்ற சிறுவனும், டாவியா என்ற சிறுமியும் தேர்வு செய்யப்பட்டார்கள். மேலும் கிளாசிக்கல் டான்ஸரான தாரா ஜெகதாம்பா அம்மா கதாபாத்திரத்திலும், செந்தில்குமார் அப்பா கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.
    மூவிங் பிரேம்ஸ் படநிறுவனம் தயாரிப்பில் அரவிந்த்சாமி, ரெஜினா நடிப்பில் உருவாகியிருக்கும் கள்ளபார்ட் படத்தின் முன்னோட்டம்.
    விக்ரம், தமன்னா நடிப்பில் உருவாகி மாபெரும் வெற்றிபெற்ற ஸ்கெட்ச் படத்தை தயாரித்த மூவிங் பிரேம்ஸ் படநிறுவனம் தற்போது அரவிந்த்சாமி ரெஜினா நடித்துள்ள "கள்ளபார்ட்" படத்தை மிகுந்த பொருட்செலவில் தயாரித்துள்ளது. என்னமோ நடக்குது, அச்சமின்றி போன்ற படங்களை இயக்கிய ராஜபாண்டி இந்த படத்தை இயக்கியுள்ளார்.

    கதாநாயகனாக அரவிந்த்சாமி நடித்துள்ளார். கதாநாயகியாக ரெஜினா கசாண்ட்ரா நடித்துள்ளார். பார்த்தி, ஆதேஷ் பாலா, பேபி மோனிகா, ஹரிஷ் பெறாடி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    ஒளிப்பதிவு - அரவிந்த் கிருஷ்ணா, இசை - நிவாஸ் K பிரசன்னா, பாடல்கள் - கங்கை அமரன், சரஸ்வதி மேனன், எடிட்டிங் - S. இளையராஜா, கலை - மாயா பாண்டி, ஸ்டண்ட் - மிராக்கில் மைக்கேல், தயாரிப்பு - S.பார்த்தி, S.சீனா, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - P.ராஜபாண்டி. DF.Tech.
    நானி, முன்னணி இயக்குநர் விவேக் ஆத்ரேயா, பிரபல பட தயாரிப்பு நிறுவனம் மைத்ரி மூவி மேக்கர்ஸ் ஆகிய மூவர் கூட்டணியில் உருவான அடடே சுந்தரா படத்தின் முன்னோட்டம்.
    நானி, இயக்குநர் விவேக் ஆத்ரேயா இணைந்து முதன்முறையாக இணைந்து உருவாக்கியிருக்கும் திரைப்படம் ‘அன்டே சுந்தரனக்கி’. இந்தப் படத்தின் மூலம் நடிகை நஸ்ரியா நசீம் தெலுங்கில் நாயகியாக அறிமுகமாகிறார். இவரை தெலுங்கு திரை உலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் அறிமுகப்படுத்துகிறது. இந்தப் படத்தின் விளம்பரங்களால் ஈர்க்கப்பட்ட ரசிகர்கள், படத்தின் புதிய தகவலுக்காக ஆவலுடன் காத்திருந்தனர் அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இப்படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

    இந்தப்படம் தமிழில் 'அடடே சுந்தரா' என்ற பெயரிலும், மலையாளத்தில் 'ஆஹா சுந்தரா' என்ற பெயரிலும் ஜூன் 10ஆம் தேதியன்று ஒரே சமயத்தில் வெளியாகிறது.

    இப்படத்தில் நானி, நஸ்ரியா, பகத் ஃபாசில், நதியா, ஹர்ஷவர்தன், ராகுல் ராமகிருஷ்ணன் மற்றும் பலர் நடித்துள்ளனர். 

    எழுத்து & இயக்கம். : விவேக் ஆத்ரேயா,
    தயாரிப்பாளர்கள் : நவீன் யெர்னேனி & ரவிசங்கர். ஒய்.
    தயாரிப்பு நிறுவனம் : மைத்திரி மூவி மேக்கர்ஸ்
    இசை : விவேக் சாகர்
    ஒளிப்பதிவு : நிகேத் பொம்மி
    படத்தொகுப்பு : ரவிதேஜா கிரிஜாலா

    ஆகியோர் படத்தில் பணியாற்றி இருக்கிறார்கள்.
    ×