search icon
என் மலர்tooltip icon

    காமன்வெல்த்-2022

    காமன்வெல்த் போட்டி- நீளம் தாண்டுதலில் வெள்ளி வென்றார் ஸ்ரீசங்கர் முரளி
    X

    ஸ்ரீசங்கர் முரளி

    காமன்வெல்த் போட்டி- நீளம் தாண்டுதலில் வெள்ளி வென்றார் ஸ்ரீசங்கர் முரளி

    • இந்தியா 5 தங்கம், 6 வெள்ளி, 7 வெண்கலம் என 18 பதக்கங்களை வென்றுள்ளது.
    • நீளம் தாண்டுதலில் இந்தியாவின் ஸ்ரீசங்கர் முரளி வெள்ளிப் பதக்கம் வென்றார்.

    பர்மிங்காம்:

    22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடந்துவருகிறது. இதில் இந்தியா இதுவரை 5 தங்கம், 6 வெள்ளி, 7 வெண்கலம் என 18 பதக்கங்களை வென்றுள்ளது.

    7-வது நாளில் பல்வேறு விளையாட்டுகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.

    இந்நிலையில் ஆண்களுக்கான பிரிவில் இந்தியாவின் ஸ்ரீசங்கர் முரளி 8.08 மீட்டர் நீளம் தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றார்.

    இதன்மூலம் இந்தியா 5 தங்கம், 7 வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் 19 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

    Next Story
    ×