search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    246 ரன்னில் ஆல் அவுட்- இங்கிலாந்து பேட்டிங்கை கிண்டல் செய்த டிவில்லியர்ஸ்
    X

    246 ரன்னில் ஆல் அவுட்- இங்கிலாந்து பேட்டிங்கை கிண்டல் செய்த டிவில்லியர்ஸ்

    • இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 246 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
    • சூழலுக்கு தகுந்தார் போல் இந்திய அணி வீரர்கள் விளையாடியிருக்கிறார்கள்.

    இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று ஐதராபாத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய இங்கிலாந்து அணியின் தொடக்க ஜோடி 50 ரன்கள் பாட்னர்ஷிப் அமைத்து சிறப்பான தொடக்கத்தை அமைத்தது.

    இதனையடுத்து இந்திய அணி சுழற்பந்து வீச்சை உபயோகப்படுத்தியது. இதனால் இங்கிலாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில் பென் ஸ்டோக்ஸ் மட்டும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரை சதம் விளாசினார். இறுதியில் இங்கிலாந்து அணி 64.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 246 ரன்கள் எடுத்தது.

    அதனை தொடர்ந்து இந்திய அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. அதிரடியாக விளையாடி ஜெய்ஸ்வால் அரைசதம் விளாசினார். அதனால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 1 விக்கெட்டை மட்டும் இழந்து 119 ரன்கள் எடுத்தது. இது இங்கிலாந்து அணியின் ஸ்கோரை விட 127 ரன்கள் தான் குறைவாகும்.

    இந்த நிலையில் இங்கிலாந்து அணியை தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் ஜாம்பவான் டிவில்லியர்ஸ் கிண்டலடித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    சூழலுக்கு தகுந்தார் போல் இந்திய அணி வீரர்கள் விளையாடியிருக்கிறார்கள். டெஸ்ட் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை எந்த சூழலில் எப்படி விளையாட வேண்டும். எப்படி ஆடினால் நீங்கள் முன்னிலை பெறுவீர்கள் என்பதில் தான் போட்டியின் மகிமையே இருக்கிறது.

    இதனை நீங்கள் புத்திசாலித்தனம், தைரியம் அல்லது பேஸ் பால் என்று எல்லாம் அழைக்க தேவையில்லை.

    போட்டியின் சூழல் மாறினால் அதற்கு ஏற்றார் போல் நீங்கள் உங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். உங்களுடைய தருணத்திற்காக நீங்கள் மீண்டும் காத்திருக்க வேண்டும். டெஸ்ட் கிரிக்கெட்டில் உங்களால் சூழலைப் புரிந்து கொண்டு விளையாட முடியவில்லை என்றால் அது நிச்சயம் உங்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தும்.

    நீங்கள் பேஸ் பால் அல்லது எந்த மாதிரி பாலை விளையாடினாலும் சரி. உங்களுக்கு அது நன்மையை கொடுக்காது.

    இவ்வாறு டிவில்லியர்ஸ் கூறியுள்ளார்.

    Next Story
    ×