search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    வீடியோ காலில் அபிஷேக் சர்மாவுக்கு வாழ்த்து தெரிவித்த யுவராஜ் சிங்- வைரலாகும் வீடியோ
    X

    வீடியோ காலில் அபிஷேக் சர்மாவுக்கு வாழ்த்து தெரிவித்த யுவராஜ் சிங்- வைரலாகும் வீடியோ

    • அபிஷேக் சர்மா 46 பந்துகளில் தனது முதல் சர்வதேச சதத்தைப் பதிவுசெய்தார்.
    • இதன் மூலம் ஆட்டநாயகன் விருதை அபிஷேக் சர்மா தட்டி சென்றார்.

    இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி நேற்று ஹராரேவில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் அபிஷேக் சர்மா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய 46 பந்துகளில் தனது முதல் சர்வதேச சதத்தைப் பதிவுசெய்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 234 ரன்களைக் குவித்தது.

    அதன்பின் விளையாடிய ஜிம்பாப்வே அணி 18.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 134 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இப்போட்டியில் சதமடித்து அசத்திய அபிஷேக் சர்மா ஆட்டநாயகன் விருதை வென்றார்.

    இந்நிலையில் இப்போட்டி முடிந்த கையோடு அபிஷேக் சர்மா, தனது ஆலோசகரும், இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவனுமான யுவராஜ் சிங்குடன் வீடியோ கால் வாயிலாக உரையாடினார். அப்போது யுவாராஜ் சிங் அபிஷேக் சர்மாவிடம், "உன்னை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். நீங்கள் அதற்கு தகுதியானவர். இது வெறும் ஆரம்பம் மட்டும் தான். இன்னும் பல வர உள்ளன" என்று பாராட்டியுள்ளார்.

    இந்நிலையில் இப்போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர் அபிஷேக் சர்மா சதமடித்து அசத்தியதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சில சாதனைகளையும் படைத்துள்ளார். அந்தவகையில் அவர் தனது இரண்டாவது போட்டியிலேயே சதமடித்து அசத்தியதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் மிகக்குறைந்த இன்னிங்சில் சதமடித்த வீரர் எனும் சாதனை படைத்துள்ளார்.

    Next Story
    ×