search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    ஆப்கானிஸ்தான் - அயர்லாந்து போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது
    X

    ஆப்கானிஸ்தான் - அயர்லாந்து போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது

    • தொடர்ந்து மழை பெய்து வந்ததால் ஒரு பந்து கூட வீசப்படாமல் போட்டி கைவிடப்பட்டது.
    • இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டது.

    மெல்போர்ன்:

    20 ஓவர் உலகக்கோப்பை போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. 'சூப்பர்-12' சுற்றில் குரூப்-1 பிரிவில் இடம் பெற்றுள்ள ஆப்கானிஸ்தான்-அயர்லாந்து அணிகள் மோதும் போட்டி இந்திய நேரப்படி இன்று காலை மெல்போர்ன் நகரில் தொடங்க இருந்தது.

    அயர்லாந்து அணி 2 ஆட்டத்தில் ஒரு வெற்றி, ஒரு தோல்வி பெற்றது. அந்த அணி இலங்கையிடம் தோற்றது. இங்கிலாந்தை வீழ்த்தியது. ஆப்கானிஸ்தான் அணி இங்கிலாந்திடம் தோல்வி அடைந்தது.

    நியூசிலாந்துடன் மோத இருந்த ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது. ஆப்கானிஸ்தான் இன்று தனது 3-வது ஆட்டத்தில் அயர்லாந்தை சந்திக்க இருக்கிறது.

    மெல்போர்ன் நகரில் இன்று மழை பெய்வதற்கு 90 சதவீதம் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதற்கு ஏற்றார் போல் டாஸ் போடுவதற்கு முன்பு மழை பெய்ய தொடங்கியது. இதனால் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

    ஆடுகளம் மற்றும் மைதானத்தின் மற்ற பகுதிகள் மூடப்பட்டு இருந்தது. தொடர்ந்து மழை பெய்து வந்து உள்ளூர் நேரப்படி மாலை 4 மணிக்கு நடுவர்கள் மைதானத்தை ஆய்வு செய்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. மாலை 3 மணியளவில் மழை குறைந்த நிலையில் அரை மணி நேரத்தில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியது.

    மெல்போர்னில் தொடர்ந்து மழை பெய்ததால் ஆப்கானிஸ்தான்-அயர்லாந்து போட்டியை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் ஆட்டம் ரத்து செய்யப்படு வதாக அறிவிக்கப்பட்டது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

    இதன் மூலம் அரை இறுதி வாய்ப்பில் நீடிக்க இரு அணிகளும் எஞ்சிய ஆட்டங்களில் வெற்றி பெற வேண்டும்.

    இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-இங்கிலாந்து (குரூப்-1) மெல்போர்னில் மோத உள்ளன. இந்த ஆட்டமும் மழையால் பாதிக்க வாய்ப்பு உள்ளது.

    Next Story
    ×