search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    அமெரிக்கா- அயர்லாந்து போட்டி மழையால் பாதிப்பு- வெளியேறும் பாகிஸ்தான்?
    X

    அமெரிக்கா- அயர்லாந்து போட்டி மழையால் பாதிப்பு- வெளியேறும் பாகிஸ்தான்?

    • இந்த போட்டியில் அமெரிக்கா அணி தோல்வியை சந்தித்தால் மட்டுமே பாகிஸ்தான் அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற ஒரு வழி இருக்கிறது.
    • இந்த போட்டி நடைபெறாமல் இருந்தாலும் அமெரிக்கா தகுதி பெற்று விடும்.

    புளோரிடா:

    20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இன்றைய 30-வது லீக் ஆட்டத்தில் அமெரிக்கா - அயர்லாந்து அணிகள் மோத உள்ளன. இந்த போட்டி புளோரிடா மாகாணத்தில் உள்ள லாடெர்ஹில் நகரில் நடைபெற உள்ளது.

    இந்நிலையில் அங்கு மழை பெய்வதன் காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அவுட் பீல்ட் ஈரமாக இருப்பதால் நடுவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். 2 மணி நேரம் கழித்து ஆய்வு செய்த பின்னர் 5 ஓவர் கொண்ட போட்டி நடைபெறும் என நடுவர்கள் தெரிவித்துள்ளனர்.

    இந்த போட்டியில் அமெரிக்கா அணி தோல்வியை சந்தித்தால் மட்டுமே பாகிஸ்தான் அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற ஒரு வழி இருக்கிறது. இந்த போட்டியில் அமெரிக்கா வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும். மேலும் இந்த போட்டி நடைபெறாமல் இருந்தாலும் அமெரிக்கா தகுதி பெற்று விடும்.


    அமெரிக்கா 3 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் வெற்றி பெற்று 4 புள்ளிகளில் இரண்டாவது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் 3 போட்டிகளில் விளையாடி 1 மட்டுமே வெற்றி பெற்று 3-வது இடத்தில் உள்ளது. இந்த போட்டி நடைபெறமால் போனால் இரு அணிக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்படும். இதனால் 5 புள்ளிகளை அமெரிக்கா பெறும். அடுத்த போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றால் கூட 4 புள்ளிகளே பெறும். இதனால் பாகிஸ்தான் இந்த தொடரில் இருந்து வெளியேறும்.

    இதனால் போட்டி எப்படியாவது நடைபெற வேண்டும் என பாகிஸ்தான் வீரர்கள் மட்டுமின்றி ரசிகர்களும் வேண்டி கொண்டிருப்பார்கள்.

    Next Story
    ×