search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    எங்களுக்கு மிரட்டல் வந்தபோதும் இந்தியாவில் விளையாடினோம்- அப்ரிடி பரபரப்பு பேச்சு
    X

    எங்களுக்கு மிரட்டல் வந்தபோதும் இந்தியாவில் விளையாடினோம்- அப்ரிடி பரபரப்பு பேச்சு

    • பாதுகாப்பு காரணமாக இந்திய அணியை அண்டை நாட்டிற்கு அனுப்ப விரும்பவில்லை என பிசிசிஐ தெரிவித்தது.
    • நீங்கள் இந்திய அணியை பாகிஸ்தானுக்கு அனுப்புங்கள், நாங்கள் அவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்போம்.

    பாகிஸ்தான் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்ய தீர்மானித்திருந்த போது இந்தியர் ஒருவர் பாகிஸ்தான் அணியை மிரட்டினார் என ஷாஹித் அப்ரிடி சுட்டிக் காட்டியுள்ளார்.

    ஆசிய நாடுகள் பங்குபெறும் ஆசிய கோப்பை போட்டி இன்னும் சில மாதங்களில் தொடங்கவுள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தான் அணி இந்த ஆசிய கோப்பை போட்டி பாகிஸ்தானில் நடைபெற வேண்டுமென விரும்புகிறது.

    ஆனால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்(பிசிசிஐ) பாதுகாப்பு காரணமாக இந்திய அணியை அண்டை நாட்டிற்கு அனுப்ப விரும்பவில்லை என தெரிவித்துள்ளது.

    இதனை தொடர்ந்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் இது தொடர்பாக ஷாஹித் அப்ரிடியிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதில் அளித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    சில வருடங்களுக்கு முன்பு இந்திய சுற்றுப்பயணத்தின் போது பாகிஸ்தான் அணியை இந்தியர் ஒருவர் அச்சுறுத்தியதாக கூறியுள்ளார். ஆனாலும் நாங்கள் இந்தியா சென்று விளையாடினோம். மேலும், ஆசிய கோப்பைக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல முடிவு செய்தால், அவர்கள் மீது பாகிஸ்தான் மிகுந்த கவனம் செலுத்தும் என உறுதியளிக்கிறேன்.

    நீங்கள் இந்திய அணியை பாகிஸ்தானுக்கு அனுப்புங்கள், நாங்கள் அவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்போம். இதற்கு முன், மும்பையைச் சேர்ந்த இந்தியர் ஒருவர் எங்களை மிரட்டினார். அதை எங்கள் அரசு பொறுப்பாக ஏற்று பாகிஸ்தான் அணி இந்தியா சென்றது. எனவே மிரட்டல்கள் எங்கள் உறவை சிதைக்கக்கூடாது.

    இந்தியா ஆசிய கோப்பைக்கு வர சம்மதித்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும். இது போர்கள் மற்றும் சண்டைகளின் தலைமுறை அல்ல. உறவுகள் நன்றாக இருக்க வேண்டும். நாங்கள் இந்தியாவுக்கு எதிராக நிறைய விளையாடியுள்ளோம்.

    நாங்கள் இந்தியாவுக்கு வந்தபோது எங்களுக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்தது நினைவிருக்கிறது. இது தான் இரண்டு நாடுகளுக்கு இடையே உள்ள அழகான உறவு.

    என அப்ரிடி தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×