என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட் (Cricket)
இது ஒரு அழகான பயணத்தின் தொடக்கம்- மகனின் அறிமுக போட்டி குறித்து சச்சின் நெகிழ்ச்சி
- நீங்கள் இங்கு வருவதற்கு மிகவும் கடினமாக உழைத்துள்ளீர்கள்.
- ஐபிஎல்லின் 15 ஆண்டுகால வரலாற்றில், அணியில் இடம்பெற்ற முதல் தந்தை-மகன் ஜோடி என்கிற சிறப்பை சச்சின்-அர்ஜூன் பெற்றனர்.
ஐபிஎல் போட்டியில் நேற்று நடந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் -மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இதில் மும்பை இந்தியன்ஸ் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியில் அறிமுகமான தனது மகன் அர்ஜூனுக்கு சச்சின் டெண்டுல்கர் சில அறிவுரைகளை வழங்கினார்.
23 வயதான அர்ஜுன், ஒரு ஆல்-ரவுண்டர், தனது முதல் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக பந்து வீசிய அவர், இரண்டு ஓவர்களை வீசினார். விக்கெட் ஏதும் எடுக்கவில்லை என்றாலும், இரண்டு ஓவர்களை வீசி 17 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.
இந்நிலையில் சச்சின் டெண்டுல்கர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-
அர்ஜுன், இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரு கிரிக்கெட் வீரராக உங்களின் பயணத்தில் இன்னொரு முக்கியமான படியை எடுத்துள்ளீர்கள். உங்கள் தந்தையாக, உங்களை நேசிக்கும் மற்றும் விளையாட்டின் மீது ஆர்வமுள்ள ஒருவராக, விளையாட்டுக்கு உரிய மரியாதையை நீங்கள் தொடர்ந்து அளிப்பீர்கள் என்று எனக்குத் தெரியும். விளையாட்டு உங்களை மீண்டும் நேசிக்கும்.
நீங்கள் இங்கு வருவதற்கு மிகவும் கடினமாக உழைத்துள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து சிறப்பாக செயல்படுவீர்கள் என்று நான் நம்புகிறேன். இது ஒரு அழகான பயணத்தின் தொடக்கமாகும். ஆல் தி பெஸ்ட்!" என்று அந்த டுவிட்டில் சச்சின் நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டுள்ளார்.
ஐபிஎல்லின் 15 ஆண்டுகால வரலாற்றில், அணியில் இடம்பெற்ற முதல் தந்தை-மகன் ஜோடி என்கிற சிறப்பை சச்சின்-அர்ஜூன் பெற்றனர். டெண்டுல்கர் 2008 முதல் 2013 வரை மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆறு ஆண்டுகள் விளையாடினார்.
ஐந்து முறை ஐபிஎல் சாம்பியனான மும்பை அணியில் அர்ஜுன் முதல் முறையாக 2021 ஏலத்தின் போது அவரது அடிப்படை விலையான ரூ.20 லட்சத்தில் தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்