என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட் (Cricket)
மழையால் பந்துவீச்சாளர்கள் மிகவும் சிரமப்பட்டனர்- தோல்வி குறித்து அருண் கார்த்திக் கருத்து
- பேட்டிங்கில் எங்களது ஷாட்கள் தவறாக இருந்தது.
- கோவை அணி கேப்டன் ஷாருக்கான் பந்து வீச்சாளர்களை சரியாக பயன்படுத்தி எங்களை கட்டுப்படுத்தினார்.
கோவை:
டி.என்.பி.எல். போட்டியில் நெல்லை அணியை வீழ்த்தி கோவை கிங்ஸ் ஹாட்ரிக் வெற்றியை பெற்றது. கோவையில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய நெல்லை ராயல் கிங்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 167 ரன் எடுத்தது.
கேப்டன் அருண் கார்த்திக் 38 பந்தில் 47 ரன்னும் (பவுண்டரி, 2 சிக்சர்) சோனு யாதவ் 26 பந்தில் 43 ரன்னும் (1 பவுண்டரி, 5 சிக்சர்) எடுத்தனர். கேப்டன் ஷாருக்கான், எம்.முகமது தலா 2 விக்கெட் வீழ்த்தினார்கள்.
பின்னர் ஆடிய நடப்பு சாம்பியன் கோவை கிங்ஸ் 18.3 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 172 ரன் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சச்சின் 48 பந்தில் 76 ரன்னும் (8 பவுண்டரி, 3 சிக்சர்), சுரேஷ் குமார் 55 பந்தில் 63 ரன்னும் (3 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர்.
வெற்றி குறித்து கோவை கிங்ஸ் கேப்டன் ஷாருக்கான் கூறியதாவது:-
டி.என்.பி.எல். தொடரில் தொடர்ந்து 10-வது வெற்றியை பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. முதல் 2 போட்டியில் கடுமையாக போராடி வென்றோம். இனி வரும் போட்டிகளிலும் எங்களின் முழு திறமையை வெளிப்படுத்தி மிகப்பெரிய வெற்றியை பெறுவோம். சொந்த ஊரான கோவையில் வெற்றி பெறுவது எப்போதுமே மகிழ்ச்சி அளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
நெல்லை ராயல்ஸ் கிங்ஸ் முதல் தோல்வியை தழுவியது. தோல்வி குறித்து அந்த அணி கேப்டன் அருண் கார்த்திக் கூறும்போது, 'மழை பெய்ததால் பந்து வீச்சாளர்கள் பந்து வீச மிகவும் சிரமப்பட்டனர்'. பேட்டிங்கில் எங்களது ஷாட்கள் தவறாக இருந்தது. கோவை அணி கேப்டன் ஷாருக்கான் பந்து வீச்சாளர்களை சரியாக பயன்படுத்தி எங்களை கட்டுப்படுத்தினார். இனி வரும் போட்டிகளில் சிறப்பாக ஆடுவோம் என்றார்.
இன்று நடைபெறும் 'லீக்' ஆட்டங்களில் சேலம் ஸ்பார்ட்ன்ஸ்-திருச்சி கிராண்ட் சோழாஸ் (மாலை 3.15), சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-திண்டுக்கல் டிரா கன்ஸ் (இரவு 7.15) அணிகள் மோதுகின்றன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்