search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    ஆசிய கோப்பை: சூப்பர்4 சுற்றின் முதல் ஆட்டத்தில் இலங்கை வெற்றி
    X

    மெண்டிஸ்      நிசங்கா

    ஆசிய கோப்பை: சூப்பர்4 சுற்றின் முதல் ஆட்டத்தில் இலங்கை வெற்றி

    • முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் 175 ரன்களை எடுத்தது.
    • இலங்கை வீரர் மெண்டிஸ் 36 ரன் அடித்தார்.

    சார்ஜா:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்று போட்டியின் முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான், இலங்கை அணிகள் மோதின. சார்ஜாவில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.

    தொடக்க ஆட்டக்காரர் ஹசரத்துல்லா ஷஷாய் 13 ரன்னில் அவுட்டானார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ரஹ்மதுல்லா குர்பாஸ் 45 பந்துகளில் 6 சிக்சர், 4 பவுண்டரி உள்பட 84 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இப்ராகிம் சட்ரன் 40 ரன்னில் அவுட்டானார். நஜிபுல்லா சட்ரன் 17 ரன்னிலும், கேப்டன் முகமது நபி ஒரு ரன்னிலும் வெளியேறினர். இறுதியில், ஆப்கானிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 175 ரன்களை எடுத்தது.

    இதையடுத்து, விளையாடிய இலங்கை அணியில் தொடக்க வீரர்கள் நிசங்கா 35 ரன்னும், மெண்டிஸ் 36 ரன்னும் அடித்தனர். குணதிலகா 33 ரன் அடித்தார். பானுகா 31 ரன் எடுத்தார். ஹசரங்கா டிசெல்வா 16 ரன்னுடன் களத்தில் இருந்தார். இலங்கை அணி 19.1 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் அடித்தது. இதையடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அந்த அணி வெற்றி பெற்றது.

    Next Story
    ×