என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட் (Cricket)
வளர்ந்துவரும் வீரர்கள் ரோகித் பேட்டிங்கை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள்- முன்னாள் வீரர் அதிரடி
- வளர்ந்துவரும் ஒவ்வொரு கிரிக்கெட் வீரரும், ரோகித் சர்மா பந்தை எந்த திசையில் எப்படி அடிக்கிறார் என்பதை பார்க்க வேண்டும்.
- ரோகித் சர்மா ஆடும் விதத்தை பார்க்கையில், கடைசி 2 டெஸ்ட் போட்டிகளிலும் அவர் அபாரமாக ஆடுவார்.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 2 போட்டிகளிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்று 2-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது.
சுழற்பந்துக்கு சாதகமான இந்திய ஆடுகளங்களில் டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற சுழற்பந்து வீச்சாளர்கள்தான் முக்கியமான அஸ்திரம் என்பதை உணர்ந்து நாதன் லயன், டாட் மர்ஃபி, குன்னெமன், அஷ்டான் அகர் என 4 ஸ்பின்னர்களுடன் ஆஸ்திரேலிய அணி இந்தியாவிற்கு வந்தது.
முதல் டெஸ்ட்டில் அணி தேர்வில் தவறிழைத்துவிட்டது. 2வது டெஸ்ட்டில் அந்த அணியின் ஸ்பின்னர்கள் சிறப்பாக செயல்பட்டனர். ஸ்பின்னை பயன்படுத்துவதில் ஓரளவிற்கு தேறிய ஆஸ்திரேலிய அணி, இந்திய ஸ்பின்னர்களை எதிர்கொள்வதில் கோட்டைவிட்டது.
இந்திய அணியின் முன்னணி வீரர்களான கோலி, புஜாரா ஆகியோரும் திணறும் நிலையில், ரோகித் சர்மா ஸ்பின்னர்கள் மீது ஆதிக்கம் செலுத்தி அடித்து ஆடி முதல் டெஸ்ட்டில் சதமடித்து 120 ரன்களை குவித்தார்.
சுழற்பந்துக்கு சாதகமான ஆடுகளங்களில் எப்படி ஆடவேண்டும் என்று வளர்ந்துவரும் வீரர்கள் ரோகித் சர்மாவின் பேட்டிங்கை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று முகமது கைஃப் கருத்து கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய முகமது கைஃப்:-
ரோகித் சர்மா நல்ல ஃபார்மில் உள்ளார். நிறைய ரன்களை அடித்துவருகிறார். ஸ்பின்னிற்கு சாதகமான ஆடுகளங்களில் எப்படி பேட்டிங் ஆடவேண்டும் என்பதை ஆடியே காட்டுகிறார். லாங் ஆனில் ஃபீல்டரே நின்றாலும் கூட, அவரது தலைக்கு மேல் தூக்கி சிக்சர் அடிக்கிறார் ரோகித்.
லாங் ஆனில் ஃபீல்டர் நின்றாலும் தனது திறமை மீது நம்பிக்கை வைத்து சிக்சர் அடிக்கிறார். வளர்ந்துவரும் ஒவ்வொரு கிரிக்கெட் வீரரும், ரோகித் சர்மா பந்தை எந்த திசையில் எப்படி அடிக்கிறார் என்பதை பார்க்க வேண்டும்.
ரோகித் சர்மா ஆடும் விதத்தை பார்க்கையில், கடைசி 2 டெஸ்ட் போட்டிகளிலும் அவர் அபாரமாக ஆடுவார்.
என்று முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்