என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட் (Cricket)
பாகிஸ்தானுக்கு எதிரான பாக்சிங் டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு
- பெர்த் டெஸ்டில் ஆஸ்திரேலியா 360 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- மெல்போர்ன் மைதானத்தில் 80 ஆயிரம் ரசிகர்கள் போட்டியை நேரில் பார்க்க முடியும்.
பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. பெர்த் நகரில் கடந்த 14-ந்தேதி முதல் டெஸ்ட் தொடங்கி நடைபெற்றது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா 360 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
2-வது டெஸ்ட் மெல்போர்ன் நகரில் பாக்சிங் டெஸ்டாக டிசம்பர் 26-ந்தேதி முதல் டிசம்பர் 30-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த போட்டிக்கான 13 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
1. கம்மின்ஸ், 2. ஸ்காட் போலந்து, 3. அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), 4. ஹேசில்வுட், 5. டிராவிஸ் ஹெட், 6. உஸ்மான் கவாஜா, 7. லபுசேன், 8. நாதன் லயன், 9. மிட்செல் மார்ஷ், 10. ஸ்டீவ் சுமித், 11. மிட்செல் ஸ்டார்க், 12. டேவிட் வார்னர், 13. கேமரூன் க்ரீன்.
மெல்போர்ன் மைதானத்தில் சுமார் 80 ஆயிரம் பேர் அமர்ந்து போட்டியை நேரில் கண்டு ரசிக்க முடியும். கிறிஸ்துமஸ் தினத்திற்கு அடுத்த நாளான 26-ந்தேதி மைதானம் ரசிகர்களால் முழுமையான நிறைந்திருக்கும்.