search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    டி20 உலக கோப்பை - ஆஸ்திரேலியா வெற்றிபெற 158 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இலங்கை
    X

    நிதானமாக ஆடிய நிசங்கா, டி சில்வா ஜோடி

    டி20 உலக கோப்பை - ஆஸ்திரேலியா வெற்றிபெற 158 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இலங்கை

    • டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங் தேர்வு செய்தது.
    • கொரோனா தொற்றால் ஆடம் ஜாம்பா இடம்பெறவில்லை.

    பெர்த்:

    டி20 உலக கோப்பையில் ஆஸ்திரேலியா, இலங்கை அணிகள் இன்று மோதி வருகின்றன. ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் ஆடம் ஜம்பாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுதை அடுத்து இன்றைய போட்டியில் அவர் இடம்பெறவில்லை. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர் குசால் மெண்டிஸ் 5 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய தனஞ்செய டி சில்வா, நிசரங்காவுடன் இணைந்து நிதானமாக ஆடினார். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 69 ரன்கள் சேர்த்த நிலையில் டி சில்வா 26 ரன்னில் அவுட்டானார்.

    பொறுப்புடன் ஆடிய நிசங்கா 40 ரன்னில் வெளியேறினார். பானுகா ராஜபக்ச 7 ரன்னிலும், டாசன் ஷனகா 3 ரன்னிலும், ஹசரங்கா ஒரு ரன்னிலும் அவுட்டாகினர்.

    இறுதியில், இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 157 ரன்களை எடுத்தது. சரித் அசலங்கா 38 ரனனுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். இதையடுத்து, 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்குகிறது.

    Next Story
    ×