என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட் (Cricket)
2-வது டெஸ்ட்டிலும் பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலியா
- பாகிஸ்தான் அணி 237 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
- ஆஸ்திரேலியா தரப்பில் கம்மின்ஸ் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்றது. கடந்த 26-ந்தேதி தொடங்கிய இந்த போட்டியில் ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி முதல் இன்னிங்சில் 318 ரன்கள் சேர்த்த நிலையில், பாகிஸ்தான் 264 ரன்னில் சுருண்டது.
பின்னர் 54 ரன்கள் முன்னிலைப் பெற்ற ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சில் நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்பிறகு 187 ரன்கள் எடுத்திருந்தது. அலேக்ஸ் கேரி 16 ரன்களுடன் களத்தில் இருந்தார். இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய அலேக்ஸ் கோரி 53 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதனால் ஆஸ்திரேலியா 262 ரன்னில் ஆல்அவுட் ஆனது. பாகிஸ்தான் அணி சார்பில் ஷாஹீன் அப்ரிடி, மிர் ஹம்சா ஆகியோர் தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.
ஒட்டுமொத்தமாக ஆஸ்திரேலியா 316 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இதனால் பாகிஸ்தான் அணிக்கு 317 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
317 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி 2-வது இன்னிங்சில் விளையாடியது. தொடக்க வீரர்கள் சபீக் 4 ரன்னிலும் இமாம் 12 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து கேப்டன் மசூத்- பாபர் அசாம் ஜோடி நிதானமாக விளையாடினர்.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மசூத் 60 ரன்களில் அவுட் ஆனார். அவரை தொடர்ந்து பாபர் அசாம் 41 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த வீரர்கள் சகீல் 24, ரிஸ்வான் 35, சல்மான் 50, ஜமால் 0, அஃப்ரிடி 0, ஹம்சா 0 என சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது.
இதனால் பாகிஸ்தான் அணி 237 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் ஆஸ்திரேலியா 79 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய தரப்பில் கம்மின்ஸ் 5 விக்கெட்டுகளையும், ஸ்டார்க் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.
முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா 2-0 என கைப்பற்றியது. இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி ஜனவரி 3-ந் தேதி தொடங்குகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்