search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: கிரீனின் வேகத்தில் தென் ஆப்பிரிக்கா ஆல் அவுட்
    X

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: கிரீனின் வேகத்தில் தென் ஆப்பிரிக்கா ஆல் அவுட்

    • தென் ஆப்பிரிக்கா 67 ரன்களுக்குள் ஐந்து விக்கெட்டை இழந்திருந்தது.
    • ஆஸ்திரேலியா அணி சார்பில் கிரீன் 5 விக்கெட்டுகளும், மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்களும் வீழ்த்தினர்.

    ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி இன்று நடைபெற்றது.

    இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன் படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி பேட்ஸ்மேன்கள் ஆஸ்திரேலியா அணியின் வேகப்பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்களைப் பறிகொடுத்தனர்.

    67 ரன்களுக்குள் ஐந்து விக்கெட்டை இழந்து தடுமாறிய நிலையில், அதற்கடுத்து வந்த யான்சன் மற்றும் வெரெய்னே ஆகியோர் நிதானமாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். 6-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 100 ரன் பாட்னர்ஷிப் அமைத்து கொடுத்தது.

    இந்த பாட்னர்ஷிப்பை கிரீன் பிரித்தார். இருவரும் அரை சதம் அடித்திருந்த நிலையில் கிரீன் பந்து வீச்சில் இருவரும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேற தென்னாப்பிரிக்க அணி 68.4 ஓவர்கள் சந்தித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

    ஆஸ்திரேலியா அணி சார்பில் கிரீன் 5 விக்கெட்டுகளும், மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்களும், போலண்ட் மற்றும் லயன் ஆகியோர் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதனையடுத்து ஆஸ்திரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர் - உஸ்மான் கவாஜா களமிறங்கினர். 1 ரன்னில் ரபாடா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து மார்னஸ் லாபுசாக்னே - வார்னர் ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.

    Next Story
    ×