search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    லைவ் அப்டேட்ஸ்: சதம் அடித்து போட்டியை முடித்து வைத்த விராட் கோலி
    X

    லைவ் அப்டேட்ஸ்: சதம் அடித்து போட்டியை முடித்து வைத்த விராட் கோலி

    • விராட் கோலி சதம், சுப்மன் கில் அரைசதம்
    • 41.3 ஓவரில் இந்தியா சேஸிங் செய்தது

    உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா- வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான போட்டி புனேயில் நடைபெற்றது. டாஸ் வென்று பேட்டிங் செய்த வங்காளதேசம் 256 ரன்கள் அடித்தது. பின்னர் இந்தியா 3 விக்கெட்டை மட்டுமே இழந்து சேஸிங் செய்தது.

    Live Updates

    • 19 Oct 2023 9:17 PM IST

      சர்வதேச கிரிக்கெட்டில் 26 ஆயிரம் ரன்களை கடந்து விராட் கோலி சாதனை படைத்தார்.

    • 19 Oct 2023 8:55 PM IST

      200 ரன்களை கடந்து இந்திய அணி விளையாடி வருகிறது. விராட் கோலி 65, கேஎல் ராகுல் 13 ரன்களில் விளையாடி வருகின்றனர்.

    • 19 Oct 2023 8:33 PM IST

      சிக்சர் அடிக்க முயன்ற ஷ்ரேயாஸ் அய்யர் 19 ரன்னில் அவுட் ஆனார்.

    • 19 Oct 2023 8:29 PM IST

      சர்வதேச கிரிக்கெட்டில் அதிக 50-க்கும் மேற்பட்ட ஸ்கோர்கள் அடித்த பட்டியலில் விராட் கோலி 4-வது இடத்துக்கு முன்னேறினார்.

      264 - சச்சின் டெண்டுல்கர்

      217 - ரிக்கி பாண்டிங்

      216 - குமார் சங்கக்கார

      212 - விராட் கோலி

      211 - ஜாக் காலிஸ்

    • 19 Oct 2023 8:28 PM IST

      விராட் கோலி 48 பந்தில் அரை சதம் விளாசினார்.

    • 19 Oct 2023 8:19 PM IST

      1 ரன் எடுக்கும் போது ஷ்ரேயஸ் அய்யர் மீது பந்து பட்டு காயம் ஏற்பட்டுள்ளது.

       

    • 19 Oct 2023 8:14 PM IST

      150 ரன்களை கடந்து இந்திய அணி விளையாடி வருகிறது.

    • 19 Oct 2023 8:00 PM IST

      சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சுப்மன் கில் அரை சதம் அடித்த கையோடு அவுட் ஆனார்.

    • 19 Oct 2023 7:25 PM IST

      ரோகித் சர்மா விக்கெட்டை ஸ்கெட்ச் போட்டு தூக்கினார் வங்காளதேச அணியின் இளம் வீரர் ஹசன். 3 -வது பந்தை ஷாட் பாலாக வீசினார், அதை ரோகித் சிக்சர் விளாசினார். அடுத்து பந்தும் ஷாட் பால் போட அதையும் சிக்சர் விளாச நினைத்த ரோகித் சர்மா அவுட் ஆனார்.



    • 19 Oct 2023 7:12 PM IST

      10 ஓவரில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 63 ரன்கள் எடுத்துள்ளது. ரோகித் சர்மா 37, சுப்மன் கில் 26 ரன்களில் விளையாடி வருகிறது.



    Next Story
    ×