search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    தலைமை பயிற்சியாளர் பதவி: பிளமிங்கை சம்மதிக்க வைக்க டோனியின் உதவியை நாடும் பிசிசிஐ...!
    X

    தலைமை பயிற்சியாளர் பதவி: பிளமிங்கை சம்மதிக்க வைக்க டோனியின் உதவியை நாடும் பிசிசிஐ...!

    • ஸ்டீபன் பிளமிங், ரிக்கி பாண்டிங், கவதம் கம்பீர் ஆகியோரில் ஒருவர் நியமிக்கப்பட வாய்ப்பு.
    • பதவிக்காலம் சுமார் இரண்டரை ஆண்டுகள் என்பதால் பிளமிங் யோசனை செய்வதாக தகவல்.

    இந்திய சீனியர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் இருந்து வருகிறார். ஜூன் மாதத்துடன் அவரது பயிற்சி காலம் முடிவுடைகிறது. இதனால் விருப்பம் உள்ளோர் விண்ணப்பிக்கலாம் என பிசிசிஐ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விண்ணப்பிக்க வருகிற 27-ந்தேதி கடைசி நாளாகும்.

    ராகுல் டிராவிட் மீண்டும் விண்ணப்பம் செய்ய விரும்பவில்லை. ரிக்கி பாண்டிங், ஸ்டீபன் பிளமிங், கவுதம் கம்பீர் ஆகியோரில் ஒருவர் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஸ்டீபன் பிளமிங் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணம் செய்ய மாட்டேன் என இதுவரை தெரிவிக்கவில்லை. ஆனால் டிசம்பர் 2027 வரை பதவிக்காலம் என்பது நீண்டு காலம் என அவர் யோசிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதற்கு முன்னதாக ராகுல் டிராவிட்டும் இதுபோன்றுதான் யோசித்தார். பின்னர் சம்மதம் தெரிவித்தார். அதேபோல் பிளமிங்கும் சம்மதம் தெரிவிக்க வாய்ப்புள்ளதாக பிசிசிஐ அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    பிளமிங் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்து வருகிறார். அவருடன் எம்.எஸ். டோனி நெருக்கமாக உள்ளார். இதனால் டோனி மூலம் பிளமிங்கை சம்மதிக்க வைக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    ராகுல் டிராவிட் முதலில் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. பின்னர் வற்புறுத்தப்பட்டார். அதேபோல் ஸ்டீபன் பிளமிங் வற்புறத்தப்படலாம். இதற்கு டோனியை விட சிறந்த நபர் யாராக இருக்க முடியும்? என பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்தாக செய்திகள் வெளியாகி உள்ளது.

    Next Story
    ×