search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    டி20 உலகக்கோப்பை: இந்திய அணியின் 3-வது வேகப்பந்து வீச்சாளராக புவனேஸ்வர் குமார் இருப்பார்- வாசிம் ஜாபர்
    X

    வாசிம் ஜாபர் - புவனேஸ்வர் குமார் 

    டி20 உலகக்கோப்பை: இந்திய அணியின் 3-வது வேகப்பந்து வீச்சாளராக புவனேஸ்வர் குமார் இருப்பார்- வாசிம் ஜாபர்

    • பும்ராவுடன் இணைந்து விளையாடும் ஆடும் லெவனில் இடம் பெறுவதற்கு புவனேஷ்வர் குமார் போதுமானதை விட சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
    • ரோகித் சர்மா இல்லையென்றால் நான் ஹர்திக் பாண்ட்யாவை தான் கேப்டனாக நியமிக்க வேண்டும் என கூறுவேன்.

    இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான 5 போட்டிகள் கொண்ட தொடரில் புவனேஸ்வர் குமார் சிறப்பாக செயல்பட்டதன் மூலம் டி20 உலகக்கோப்பைக்கான பந்துவீச்சு வரிசை தொடர்பாக எழும் விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வாசிம் ஜாபர் கருத்து தெரிவித்துள்ளார்.

    பும்ராவுடன் இணைந்து விளையாடும் ஆடும் லெவனில் இடம் பெறுவதற்கு புவனேஷ்வர் குமார் போதுமானதை விட சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார் என்று அவர் கூறினார்.

    இது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் கூறியதாவது:-

    தென் ஆப்பிரிக்கா தொடர் முழுவதும் பந்து வீசிய விதத்தைப் பார்க்கும் போது டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியின் மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராக புவனேஸ்வர் குமார் உறுதிப்படுத்திக் கொண்டார் என்று நினைக்கிறேன். எனது புத்தகத்தில் பும்ரா மற்றும் ஹர்ஷல் படேல் முதல் இரண்டு இடத்தில் உள்ளனர். புவனேஸ்வர் குமார் நிச்சயமாக எனது கருத்துப்படி மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக இருப்பார்.

    டி20 தொடரில் யாரையாவது கேப்டனாக நியமிக்க வேண்டும் என்னும் பட்சத்தில் ரோகித் சர்மா இல்லையென்றால் நான் ஹர்திக் பாண்ட்யாவை தான் கேப்டனாக நியமிக்க வேண்டும் என கூறுவேன்.

    இவ்வாறு வாசிம் ஜாபர் கூறினார்.

    Next Story
    ×