search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    அஸ்வினை சேர்க்காதது மிகப்பெரிய தவறு: மைக்கேல் வாகன் கருத்து
    X

    அஸ்வினை சேர்க்காதது மிகப்பெரிய தவறு: மைக்கேல் வாகன் கருத்து

    • சென்னையை சேர்ந்த சுழற்பந்து வீரர் அஸ்வினை சேர்க்காதது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
    • உலகின் தரம் வாய்ந்த சுழற்பந்து வீரரான அஸ்வினை தவிர்ப்பது மிகவும் கடினமான ஒன்று என கங்குலி குறிப்பிட்டார்.

    லண்டன்:

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் 11 பேர் கொண்ட இந்திய அணியில் சென்னையை சேர்ந்த சுழற்பந்து வீரர் அஸ்வின் இடம்பெறவில்லை. அவரை சேர்க்காதது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

    ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்றவாறு 4 வேகப்பந்து வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்றும், அஸ்வினை நீக்கியது கடினமான முடிவு என்றும் கேப்டன் ரோகித் சர்மா விளக்கம் அளித்து இருந்தார்.

    இந்த நிலையில் அஸ்வினை சேர்க்காதது மிகப்பெரிய தவறு என்று முன்னாள் வீரர்கள் மைக்கேல் வாகன், கங்குலி, ரிக்கி பாண்டிங் கருத்து தெரிவித்து உள்ளனர்.

    இங்கிலாந்து முன்னாள் கேப்டன் வாகன் தனது டுவிட்டர் பதிவில் "உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் அஸ்வின் இல்லை. அவரை நீக்கியது மிகப்பெரிய தவறு" என்று குறிப்பிட்டுள்ளார்.

    இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்னாள் தலைவருமான கங்குலி கூறும்போது, "ஒவ்வொரு கேப்டனும் வித்தியாசமாக சிந்திக்க கூடியவர்கள். உலகின் தரம் வாய்ந்த சுழற்பந்து வீரரான அஸ்வினை 11 பேர் கொண்ட அணியில் தவிர்ப்பது மிகவும் கடினமான ஒன்றாகும்" என்றார்.

    ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் நிக்கி பாண்டிங் கூறும்போது, "ஆடுகள தன்மையை பொறுத்து வேகப்பந்து வீச்சுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டாலும் அஸ்வின் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர் ஆவார்" என்றார்.

    Next Story
    ×