search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    அவருக்கு ஓவர் கொடுக்காததே நான் செய்த தவறு- ஒப்புக்கொண்ட பட்லர்
    X

    அவருக்கு ஓவர் கொடுக்காததே நான் செய்த தவறு- ஒப்புக்கொண்ட பட்லர்

    • இந்திய அணியை கூடுதலாக 20-25 ரன்களை அடிக்கவிட்டோம்.
    • பிட்ச் சுழலுக்கு சாதகமாக இருந்தபோதும், அவருக்கு ஒரு ஓவரை கூட கொடுக்கவில்லை.

    டி20 உலகக் கோப்பையில் நேற்று நடைபெற்ற 2-வது அரையிறுதியில் இந்தியா -இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி ரோகித், சூர்யகுமார் ஆகியோரிடன் அதிரடியால் 20 ஓவர் முடிவில் 171 ரன்கள் எடுத்தது. இந்த மைதானத்தில் இதுவே அதிகமான ஸ்கோர்தான்.

    கடினமான இலக்கை நோக்கி இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக பட்லர்- சால்ட் ஜோடி களமிறங்கினர். இந்த ஜோடி தொடக்கம் முதலே அதிரடி காட்டியது. இதனால் 3 ஓவரில் 26 ரன்கள் எடுத்தது. உடனே சுதாரித்து கொண்ட ரோகித், அக்சர் படேலை ஓவர் வீச அழைத்தார். அதன் விளைவு முதல் பந்திலேயே பட்லர் அவுட் ஆனார்.

    இதனை தொடர்ந்து அடுத்து வந்த வீரர்கள் சுழற்பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால் 16.4 ஓவரில் இங்கிலாந்து 103 ரன்னில் ஆல் அவுட் ஆனது.

    இந்நிலையில் சுழலுக்கு சாதகமான இந்த மைதானத்தில் மொயின் அலிக்கு ஒரு ஓவர் கூட கொடுக்காததே தோல்விக்கு காரணம் என இங்கிலாந்து அணியின் கேப்டன் பட்லர் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இந்திய அணியை கூடுதலாக 20-25 ரன்களை அடிக்கவிட்டோம். பிட்ச் சுழலுக்கு சாதகமாக இருந்தபோதும், மொயின் அலிக்கு ஒரு ஓவரை கூட கொடுக்கவில்லை. கொடுத்திருந்தால், இந்தியாவை நிச்சயம் கட்டுப்படுத்தியிருப்போம்.

    இதுதான், நான் செய்த பெரிய தவறு. மொயின் அலிக்கு ஓவர்களை கொடுத்திருந்தால், வெற்றி வாய்ப்பு இருந்திருக்கும்'' எனக் கூறினார்.

    Next Story
    ×