search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    கிரிக்கெட் வாழ்க்கையில் பேட் கம்மின்ஸ் பந்து வீச்சை எதிர்கொண்டது கடினமாக இருந்தது- புஜாரா
    X

    கிரிக்கெட் வாழ்க்கையில் பேட் கம்மின்ஸ் பந்து வீச்சை எதிர்கொண்டது கடினமாக இருந்தது- புஜாரா

    • நான் அவுட்டாகும்போது மட்டும்தான் கோபப்படுவேன்.
    • ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்காக புஜாரா தீவிரமாக தயாராகிவருகிறார்.

    இந்திய டெஸ்ட் அணியின் நட்சத்திர வீரர் புஜாரா. 2010-ம் ஆண்டு சர்வதேச டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் அறிமுகமான புஜாரா, இதுவரை 98 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 19 சதங்கள் மற்றும் 34 அரைசதங்களுடன் 7014 ரன்களை குவித்துள்ளார்.

    இந்திய டெஸ்ட் அணி பேட்டிங் ஆர்டரில் ராகுல் டிராவிட் ஆடிய முக்கியமான 3-ம் வரிசையில் ராகுல் டிராவிட்டின் இடத்தை நிரப்பியவர் புஜாரா. அப்பேர்ப்பட்ட இடத்தை தனது நேர்த்தியான பேட்டிங் மற்றும் மிகச்சிறந்த பொறுமையாலும் நிரப்பியவர் புஜாரா.

    ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்காக தீவிரமாக தயாராகிவரும் புஜாரா, பாட் கம்மின்ஸ் பவுலிங்கை எதிர்கொள்வது மிகக்கடினம் என்று கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    நான் அவுட்டாகும்போது மட்டும்தான் கோபப்படுவேன். அவுட்டாகும்போது நான் உச்சபட்ச கோபமடைவேன். ஒவ்வொரு முறை அவுட்டாகும்போதும் எனக்கு கோபம் வரும். ஆஸ்திரேலியாவில் பாட் கம்மின்ஸ் பவுலிங்கை எதிர்கொள்வது மிகக்கடினமாக இருக்கும்.

    என்று புஜாரா கூறியுள்ளார்.

    ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டனான பாட் கம்மின்ஸ், சமகாலத்தின் சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவர். ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டரான பாட் கம்மின்ஸ், ஆஸ்திரேலிய அணிக்காக 47 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 214 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

    Next Story
    ×