என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட் (Cricket)
சூழ்நிலைகளுக்கு தகுந்தார்போல் விளையாடுங்கள்.. இங்கிலாந்தை சாடிய நாசர் ஹூசைன்
- இந்த தொடரின் பிட்ச்கள் அபாரமாக இருந்தது. எனவே இங்கிலாந்து அதைப்பற்றி எந்த புகார் சொல்ல முடியாது.
- இந்த சுற்றுப்பயணத்தில் பேட்டிங் சரிவு தான் இங்கிலாந்தின் முக்கிய பிரச்சினையாக இருந்தது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதிய 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெற்ற இந்த தொடரின் முதல் போட்டியில் வென்ற இங்கிலாந்து ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. ஆனால் அதற்கடுத்த 4 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்று தொடரை 4 - 1 என்ற கணக்கில் கோப்பையை வென்றது.
மறுபுறம் அதிரடியாக விளையாடுகிறோம் என்ற பெயரில் சொதப்பலாக பேட்டிங் செய்த இங்கிலாந்து பென் ஸ்டோக்ஸ் தலைமையில் முதல் முறையாக ஒரு தொடரில் தோல்வியை சந்தித்தது.
இந்நிலையில் இனிமேலாவது சூழ்நிலைகளுக்கு தகுந்தார் போல் விளையாடுவதை கற்றுக் கொள்ள வேண்டும் என இங்கிலாந்துக்கு நாசர் ஹுசைன் அறிவுரை கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
இந்த சுற்றுப்பயணத்தில் பேட்டிங் சரிவு தான் இங்கிலாந்தின் முக்கிய பிரச்சினையாக இருந்தது. பலமுறை அவர்கள் நல்ல துவக்கத்தைப் பெற்றும் மிடில் ஆர்டரில் சரிவை சந்தித்தனர். இந்த தொடரின் பிட்ச்கள் அபாரமாக இருந்தது. எனவே இங்கிலாந்து அதைப்பற்றி எந்த புகார் சொல்ல முடியாது.
மேலும் 5 போட்டிகளில் அவர்கள் 3 முறை டாஸ் வென்றனர். எனவே ஏன் உங்களுடைய பேட்டிங் சரிந்தது? என்பதை கற்றுக் கொள்ள முயற்சி செய்யுங்கள். ஏன் ஜாக் கிராவ்லி தொடர்ந்து நல்ல துவக்கத்தை பெற்றும் பின்னர் அவுட்டானார்? என்பதை யோசியுங்கள்.
அதே போல பந்து புதிதாகவும் சுழலும் போதும் ஒரு பவுலரை பென் டக்கெட் கண்டிப்பாக அதிரடியாக எதிர்கொள்ள வேண்டுமா? என்று பார்க்க வேண்டும். ஓலி போப் அபாரமான 196 ரன்கள் அடித்த பின் எதுவுமே செய்யவில்லை. எனவே உங்களுடைய இந்த ஆட்டத்தை பார்த்து அதில் முன்னேறும் வழியை பாருங்கள். அந்த வகையில் தான் ஒரு வீரராகவும் அணியாகவும் உங்களால் முன்னேற முடியும்.
இவ்வாறு நாசர் ஹூசைன் கூறினார்.