search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    காயம் காரணமாக விலகிய கான்வே - மாற்று வீரரை அறிவித்த சிஎஸ்கே
    X

    காயம் காரணமாக விலகிய கான்வே - மாற்று வீரரை அறிவித்த சிஎஸ்கே

    • ஐபிஎல் தொடரிலிருந்து கான்வே முழுவதுமாக விலகுவதாக சிஎஸ்கே நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது
    • கடந்த ஐ.பி.எல் தொடரில் சென்னை அணிக்காக கான்வே 672 ரன்கள் குவித்தார்.

    ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் 4 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. புதிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் சென்னை அணி சிறப்பாக விளையாடி வருகிறது.

    முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அதிரடி தொடக்க ஆட்டக்காரராக கான்வே தனது, கட்டை விரலில் ஏற்பட்ட காயத்தால், வரும் ஐ.பி.எல் தொடரின் முதல் பாதியில் விளையாடமாட்டார் என தகவல் வெளியாகியது.

    கடந்த ஐ.பி.எல் தொடரில் சென்னை அணிக்காக கான்வே 672 ரன்கள் குவித்தார். இந்நிலையில் சென்னை அணியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கும், கான்வே முதல் பாதியில் விளையாடமாட்டார் என்பது சென்னை அணிக்கு பின்னடைவாக பார்க்கப்பட்டது.

    அதனால் அவருக்கு பதிலாக மற்றொரு நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா சிஎஸ்கே அணிக்காக துவக்க வீரராக விளையாடி வருகிறார். அந்த வாய்ப்பில் முதலிரண்டு போட்டிகளில் அதிரடியாக விளையாடிய அவர் அதன் பின் சற்று தடுமாற்றமாக விளையாடி இதுவரை 6 இன்னிங்ஸில் 133 ரன்கள் எடுத்துள்ளார்.

    இந்நிலையில் காயம் இன்னும் குணமடையாததால் ஐபிஎல் 2024 தொடரிலிருந்து கான்வே முழுவதுமாக விலகுவதாக சிஎஸ்கே நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    அவருக்கு பதிலாக இங்கிலாந்தை சேர்ந்த ரிச்சர்ட் க்ளீசன் எனும் வீரரை 50 லட்சம் அடிப்படை விலைக்கு வாங்குவதாகவும் சென்னை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    36 வயதாகும் வலது கை வேகப்பந்து வீச்சாளரான அவர் 2022 முதல் இங்கிலாந்து அணிக்காக விளையாடி வருகிறார்.

    Next Story
    ×