என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட் (Cricket)
கோலியின் காலணிகளை கூட நெருங்க முடியாது- பாபர் அசாமை தாக்கிய பாக். முன்னாள் வீரர்
- பாகிஸ்தான் அணி குடும்பங்கள் மற்றும் உறவினர்கள் அடிப்படையாக வைத்து உருவாக்கப்படுகிறது.
- யாரும் நாட்டைப் பற்றி நினைப்பதில்லை. சில வீரர்களின் கேரியரில் நீங்கள் விளையாடினால் இதுவே நடக்கும்.
டி20 உலகக் கோப்பை 2024 கிரிக்கெட் தொடரில் இன்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகிறது. இதில் முதலில் இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது.
இந்த தொடரில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் தங்களுடைய முதல் போட்டியிலேயே அமெரிக்காவிடம் தோற்றது.
இந்நிலையில் கேப்டனாகவும் பேட்ஸ்மேனாகவும் சுமாராக செயல்படும் பாபர் அசாம் இந்திய வீரர் விராட் கோலியின் காலணிகளுக்கு கூட நெருங்க முடியாது என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் டேனிஷ் கனேரியா கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
பாபர் அசாம் சதமடித்ததும் அடுத்த நாள் அவரை விராட் கோலியுடன் ஒப்பிடுவதை உங்களால் பார்க்க முடியும். ஆனால் அவரால் விராட் கோலியின் காலணிகளை கூட நெருங்க முடியாது. அமெரிக்க பவுலர்கள் அவரை சிக்க வைத்தனர். அவர்களுக்கு எதிராக பாபர் அசாம் விளையாட முடியாமல் திணறினார். 40+ ரன்களில் அவுட்டான அவர் கடைசி வரை நின்று வெற்றியை பெற்றுக் கொடுத்திருக்க வேண்டும். அது பாகிஸ்தான் ஒரு தலைப்பட்சமாக வெல்ல வேண்டிய போட்டியாகும். இந்தியாவை தோற்கடிக்கும் திறமை அவர்களிடம் இல்லை.
உலகக் கோப்பை வரும் போதெல்லாம் அவர்கள் தங்களுடைய பவுலிங் பற்றி பாராட்டுகின்றனர். ஆனால் அது தான் முதல் போட்டியில் அவர்களுடைய தோல்விக்கு காரணமாகும். அவர்களுடைய ஈகோ எப்போதும் முடிவடைவதில்லை. பாகிஸ்தான் அணி குடும்பங்கள் மற்றும் உறவினர்கள் அடிப்படையாக வைத்து உருவாக்கப்படுகிறது. யாரும் நாட்டைப் பற்றி நினைப்பதில்லை. சில வீரர்களின் கேரியரில் நீங்கள் விளையாடினால் இதுவே நடக்கும்.
இவ்வாறு கனேரியா கூறினார்.