என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட் (Cricket)
கையில் உலகக் கோப்பை.. ஆக்ரோஷமாக கொண்டாடிய டிராவிட்- வைரல் வீடியோ
- இந்திய அணியின் கேப்டனாகவோ, ஒரு வீரராகவோ உலகக்கோப்பையை டிராவிட் கையில் ஏந்தியதில்லை.
- ஒரு பயிற்சியாளராக உலகக்கோப்பையை கைகளில் ஏந்தி தனது ஏக்கத்தை தணித்திருக்கிறார்.
பார்படாஸ்:
பரபரப்பாக நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தியது. இதன் மூலம் 2-வது முறையாக டி20 உலகக்கோப்பையை கைப்பற்றி அசத்தியது.
இந்த போட்டி முடிந்த பிறகு உலகக் கோப்பையை இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஸ்டைலாக வாங்கினார். இதை தொடர்ந்து அனைவரும் உலகக் கோப்பையை கையில் ஏந்தி கொண்டாடினர். அப்போது ஒரு ஓரமாக இருந்த இந்திய அணியின் பயிற்சியாளரை விராட் கோலி அழைத்து வந்து அவரிடம் கோப்பை வழங்கினார்.
இதனால் உணர்ச்சிவசப்பட்ட ராகுல் டிராவிட், கோப்பை கையில் ஏந்தி ஆக்ரோஷமாக ஆர்பரித்தார். அவருடன் சேர்ந்து அனைத்து வீரர்களும் இதனை கொண்டாடினர். இந்திய அணியின் கேப்டனாகவோ, ஒரு வீரராகவோ உலகக்கோப்பையை கையில் ஏந்தி சாதிக்க முடியாத ராகுல் டிராவிட், ஒரு பயிற்சியாளராக உலகக்கோப்பையை கைகளில் ஏந்தி தனது ஏக்கத்தை தணித்திருக்கிறார். அவர் உணர்ச்சிவசப்பட்டு கொண்டாடியது ஒவ்வொரு வீரரின் உலகக்கோப்பை ஏக்கத்தை வெளிக்காடியதாக இருந்தது.
டிராவிட்டின் பயிற்சியின் கீழ் இந்திய அணி 2023-ம் ஆண்டு நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் ஆகியவற்றில் இறுதிப்போட்டியில் தோல்வி கண்டிருந்தது.
இந்த நிலையில் ராகுல் டிராவிட், பயிற்சியாளராக தனது கடைசி உலகக்கோப்பை தொடரை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் இருந்து வருகிறார். அவரது பதவி காலம் நடந்து முடிந்துள்ள டி20 உலகக் கோப்பை தொடருடன் முடிவுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.