search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    வெற்றிக்காக நடிகராய் மாறிய ஆப்கன் வீரர்: கிண்டலடித்த லிட்டன் தாஸ்- வைரலாகும் வீடியோ
    X

    வெற்றிக்காக நடிகராய் மாறிய ஆப்கன் வீரர்: கிண்டலடித்த லிட்டன் தாஸ்- வைரலாகும் வீடியோ

    • காயமடைந்த பின் மைதானத்துக்குள் வந்த நைப் 2 ஓவர்களை வீசினார்.
    • லிட்டன் தாஸ் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 54 ரன்கள் எடுத்தார்.

    டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்று வரும் சூப்பர் 8 சுற்றின் கடைசி லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - வங்காளதேசம் அணிகள் விளையாடி வருகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வுசெய்தது.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 115 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த எளிய இலக்கு மூலம் இரு அணிகளுக்கும் அரையிறுதி வாய்ப்பு இருந்தது.

    வங்காளதேசம் அணி அரையிறுதிக்கு முன்னேற வேண்டும் என்றால் 12.4 ஓவரில் இலக்கை அடைய வேண்டும். அப்படி இல்லையென்றால் வெற்றி பெற்றால் கூட அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியாது. ஆப்கானிஸ்தான் தரப்பில் வெற்றி பெற்றாலே அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.

    இந்த நிலையில் வங்காளதேசம் அணி களமிறங்கியது. ஆப்கானிஸ்தான் அணியின் சிறப்பான பந்து வீச்சால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. ஒரு கட்டத்தில் 11 ஓவரில் 80 ரன்களில் 7 விக்கெட்டை இழந்திருந்தது. அப்போது மழை குறுக்கிட்டது. ஆனால் நடுவர் போட்டி நடக்கட்டும் என தெரிவித்தார்.

    அப்போது வங்காளதேசம் அணி 11.4 ஓவரில் 83 ரன்கள் எடுத்திருக்க வேண்டும் ஆனால் அந்த அணி 81 ரன்களே எடுத்திருந்தது. இதனால் DLS முறைப்படி ஆப்கானிஸ்தான் 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி என்ற நிலையில் இருந்தது.

    இதனை அறிந்து கொண்ட ஆப்கானிஸ்தான் பயிற்சியாளர் மழை வருகிறது. சிறிது நேரம் தாமதப்படுத்துங்கள் என்பது போல சைகை காட்டினார். இதனை புரிந்து கொண்ட ஆப்கானிஸ்தான் வீரர் நைப், உடனே காலில் காயம் ஏற்பட்டது போல நடித்து கீழே விழுந்தார்.

    இதனை பார்த்த நடுவர்கள் ஆட்டத்தை நிறுத்தினர். அந்த நேரம் மழை துளி அதிகமாக விழுந்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. உடனே வங்காளதேச வீரர் லிட்டன் தாஸ் நைப்பை கிண்டலடிக்கும் வகையில் அவர கிழே விழுந்தது போல நடித்து காட்டினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    காயம் காரணமாக வெளியே சென்ற நைப் ஒரு ஓவர் முடிந்த நிலையில் மீண்டும் களத்திற்குள் வந்தார். வந்தது மட்டுமன்றி 2 ஓவர்களையும் வீசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×