search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 498 ரன்கள் அடித்து இங்கிலாந்து அணி உலக சாதனை
    X

    பிலிப் சால்ட்         டேவிட் மாலன்           ஜாஸ் பட்லர் 

    ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 498 ரன்கள் அடித்து இங்கிலாந்து அணி உலக சாதனை

    • இங்கிலாந்து அணியில் 3 வீரர்கள் அடுத்தடுத்து சதம் அடித்தனர்.
    • அதிகபட்சமாக பட்லர் 162 ரன்கள் குவித்து கடைசிவரை களத்தில் இருந்தார்.

    நெதர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இங்கிலாந்து அணி, அந்நாட்டு அணியுடனான மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

    இரு அணிகள் பங்கேற்றுள்ள முதல் ஒருநாள் போட்டியில் ஆம்ஸ்டெல்வீன் நகரில் உள்ள வி ஆர் ஏ மைதானத்தில் நடைபெற்ற வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.

    இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியில், தொடக்க வீரர் ஜேசன் ராய் ஒரு ரன்னுடன் வெளியேறினார். மற்றொரு தொடக்க வீரர் பிலிப் சால்ட், சர்வதேச போட்டியில் தமது முதல் சதத்தை பதிவு செய்தார். தொடர்ந்து விளையாடிய அவர்,

    93 பந்துகளில் 122 ரன்களை குவித்தார். மற்றொரு வீரர் டேவிட் மாலன் 109 பந்துகளில் 125 ரன்கள் அடித்தார். மற்றொரு அதிரடி ஆட்டக்காரர் ஜாஸ் பட்லர் 70 பந்துகளில் 162 ரன்கள் குவித்தார். நெதர்லாந்து பந்து வீச்சாளர்களை துவம்சம் செய்த பட்லர், 7 பவுண்டர்கள் மற்றும் 14 சிக்சர்களை அடித்து இங்கிலாந்து ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினார்.

    கேப்டன் மோர்கன் டக் அவுட் ஆனார். லிவிங்ஸ்டோன் 66 ரன்கள் அடித்தார். 50 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து 4 விக்கெட் இழப்பிற்கு 498 ரன்கள் அடித்து ஒருநாள் போட்டியில் புதிய உலக சாதனை படைத்துள்ளது. இதையடுத்து 499 ரன்கள் என்ற பிரம்மாண்ட இலக்கை நோக்கி நெதர்லாந்து அணி விளையாடுகிறது.

    Next Story
    ×